இலங்கை
அதிக வேகத்தில் பயணித்த லொறி மாணவனின் உயிரை பறித்தது
அதிக வேகத்தில் பயணித்த லொறி மாணவனின் உயிரை பறித்தது
கம்பஹா – மினுவாங்கொடை வீதியில் வீதியவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.
அதிக வேகத்தில் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதி பின்னர் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினையடுத்து லொறியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணைந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.