பொழுதுபோக்கு
சிம்புவின் இந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை; ஆனா அவருடன் நடிப்பது தள்ளிப்போச்சு: மனம் திறந்த ட்ராகன் நடிகை!
சிம்புவின் இந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை; ஆனா அவருடன் நடிப்பது தள்ளிப்போச்சு: மனம் திறந்த ட்ராகன் நடிகை!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை கயடு லோகர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து அவர்களின் க்ரஸ்ஸாக மாறினார். முதலில் மாடலிங் துறையில் கால் பதித்த கயடு லோகர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.கடந்த் 2021-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முகில்பேடே’ திரைப்படத்தின் மூலம் கயடு லோகர் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் பிசியாக வலம் வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு `பத்தொன்பதாம் நூட்டாண்டு’ என்ற மலையாள திரைப்படம் வெளியானது. இதையடுத்து, அதே ஆண்டில் ’அல்லூரி’, ‘ஐ ப்ரேம் யூ’ போன்ற திரைப்படங்களும் வெளியானது.இதையடுத்து, தமிழ் சினிமாவில் நுழைந்த கயடு லோகர் தனக்கான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இவர் தற்போது ‘எஸ்.டி.ஆர் 49’ திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார். வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் நடிகர் சிம்பு இரண்டு தோற்றங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. நடிகர் சிம்பு நடிக்கும் 49-வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் வைரலானது. தொடர்ந்து, ‘எஸ்.டி.ஆர் 49’ திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமூக வலைதளம் மற்றும் திரையரங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருந்தார்.இந்நிலையில், நடிகர் சிம்பு குறித்து நடிகை கயடு லோகர் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ”நான் சிம்புவின் மிகப்பெரிய நடிகை. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதான் சிம்பு நடித்ததில் நான் பார்த்த முதல் திரைப்படம். இதற்கு முன்பு கெளதம் மேனன் – சிம்பு கூட்டணியில் உருவான படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. தற்போது ‘எஸ்.டி.ஆர் 49’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது” என்றார். நடிகை கயடு லோகர் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.