இலங்கை
திடீரென நடுவீதியில் தீப்பிடித்து எரிந்து சாம்பலான முச்சக்கர வண்டி!
திடீரென நடுவீதியில் தீப்பிடித்து எரிந்து சாம்பலான முச்சக்கர வண்டி!
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட், கச்சக்கொத்தீவு பிரதேசத்தில் இன்று மாலை முச்சக்கர வண்டி ஒன்று, திடீரென தீ பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குறித்த முச்சக்கர வண்டி கச்சக்கொத்தீவில் இருந்து கிண்ணியாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, இடையில் பழுதடைந்துள்ளது.
இந்த நிலையில், இடையில் கிரேச் ஒன்றில் நிறுத்தி பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளையிலே தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.