தொழில்நுட்பம்
தீபாவளி ஸ்பெஷல்: ரூ.6,999 முதல்… சாம்சங் கேலக்சி ஏ7, எஃப்07, எம்07 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!
தீபாவளி ஸ்பெஷல்: ரூ.6,999 முதல்… சாம்சங் கேலக்சி ஏ7, எஃப்07, எம்07 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!
சாம்சங் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி A07, Galaxy F07, மற்றும் Galaxy M07 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 3 மாடல்களும் ஒரே மாதிரியான ஃபீச்சர்ஸ் (Features), ஸ்பெசிஃபிகேஷன்களை (Specifications) கொண்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விற்பனைத் தளங்கள் மூலம், வெவ்வேறு நிறத் தேர்வுகளிலும் விலையிலும் விற்கப்படுகின்றன.இந்த 3 மாடல்களும் 4GB ரேம்+64GB உள்ளடக்க ஸ்டோரேஜில் (Storage) மட்டுமே கிடைக்கின்றன.இணைப்பு வசதிகள் (Connectivity): 4G LTE, புளூடூத் 5.3, Wi-Fi 5, Wi-Fi Direct, GPS, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.