இலங்கை

நாளை ஆரம்பமாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9; வெளியான காணொளி! இதெல்லாம் இருக்கா?

Published

on

நாளை ஆரம்பமாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9; வெளியான காணொளி! இதெல்லாம் இருக்கா?

 பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் (அக்டோபர் 5) முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தயாராகியுள்ளது.

பிக் பாஸ் என்றாலே விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது .

Advertisement

இம்முறையும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகம்.

ஒன்பதாவது சீசனுக்காக சுமார் 18 போட்டியாளர்கள் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர். அவர்கள் யார், யார் என்பது கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்குக் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருந்தனர்.

பிக் பாஸ் வீடு, முழுக்க முழுக்க ‘ஸ்பேஸ் தீம்’ (விண்வெளி கருத்துரு) அடிப்படையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

முந்தைய சீசன்களில் இல்லாத பல நவீன வசதிகள் இந்த சீசனில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்வதற்கு முன், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உள்ளே சென்று வீட்டின் அமைப்பையும், வசதிகளையும் பார்வையிடுவது வழக்கம்.

அந்த வகையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இந்த ஆண்டுக்கான புதிய பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்துள்ளார்.

Advertisement

அது குறித்த காணொளியும் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் வசதிகளிலேயே மிகவும் சர்ச்சைக்குரியதும், அதிக கவனத்தை ஈர்த்ததுமான அம்சம், ‘ஜக்குஸி’ (Jacuzzi) வசதிதான்.

விஜய் சேதுபதியே அந்த ஜக்குஸியைப் பார்த்தவுடன், “இதெல்லாம் இருக்கா?” என்று ஆச்சரியத்துடன் கேட்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் நாளைமுதல் பிக் பாஸ் நிகச்சியை காண இப்பவே தயாராகுங்கள் ரசிகர்களே.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version