இலங்கை

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

Published

on

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

  மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் உயர்த்துவது தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இறுதி முடிவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கான பொது ஆலோசனை செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மாதம் 8 ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனையின் இறுதி அமர்வு நடைபெற்ற பின்னர், கட்டணங்களைத் திருத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மின் கட்டணத் திருத்தத்தில் மின்சாரச் சட்டம் மற்றும் மின்சாரக் கட்டண விலை சூத்திரம் பின்பற்றப்படும்.

Advertisement

இந்த ஆண்டு ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை மின்சார சபை ரூ. 1,769 மில்லியன் இழப்பீட்டை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இழப்பை சரி செய்ய 6.8 சதவீத மின்சார கட்டண உயர்வு முன்மொழியப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version