பொழுதுபோக்கு

முதல் நாளில் கோடிகளை குவித்த தனுஷின் ‘இட்லி கடை’… 3-வது நாளில் 50% வசூல் சரிவு; காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தாக்கமா?

Published

on

முதல் நாளில் கோடிகளை குவித்த தனுஷின் ‘இட்லி கடை’… 3-வது நாளில் 50% வசூல் சரிவு; காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தாக்கமா?

நடிகர் தனுஷ் நடிப்பதில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பா.பாண்டி’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘ராயன்’ போன்ற படங்களை இயக்கிய தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ளார். மேலும், அருண் விஜய் , சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘இட்லி கடை’ திரைப்படம் முதல் நாளில் ரூ.11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து, இரண்டாம் நாளில் ரூ. 9.75 கோடியும் மூன்றாம் நாளில் ரூ. 5.5 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.மொத்தத்தில் ‘இட்லி கடை’ திரைப்படம் இந்திய அளவில் ரூ. 26.25 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் இருந்த ஓபனிங் வரும் நாட்களில் தொடர்ந்து சரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில்  இன்று பார்வையாளர்கள் வருகை நிலவரப்படி, ‘இட்லி கடை’ திரைப்படத்தின் காலை காட்சிகள் 16.76 சதவிகிதம் என மிதமாகத் தொடங்கியுள்ளது.தொடர்ந்து, பிற்பகல் காட்சிகள் 38.67 சதவிகிதமாகவும் மாலை காட்சிகள் 40.32 சதவிகிதமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் ‘இட்லி கடை’ திரைப்படத்திற்காக 455 காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  ‘இட்லி கடை’ திரைப்படத்தின் வசூல் மூன்றாம் நாளில் 50 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் வெளியீட்டின் காரணமாக தான் தனுஷின் ‘இட்லி கடை’  திரைப்படத்தின் வசூல் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. மேலும். ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது.தொடர்ந்து, இப்படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் ரஜினியின் ‘கூலி’ பட வசூலையை மிஞ்சிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version