இலங்கை

யாழ் நல்லூர்ப் பகுதியில் களவெடுத்த சந்தேகநபர் கைது

Published

on

யாழ் நல்லூர்ப் பகுதியில் களவெடுத்த சந்தேகநபர் கைது

  யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூரில் உள்ள வீடொன்று, இரவுவேளையில் உடைக்கப்பட்டு பெருந்தொகையான வெளிநாட்டு நாணயமும், தங்க ஆபரணங்களும் அண்மையில் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இது தொடர்பில் தீவிர விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவு முன்னெடுத்திருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (3) இரவு கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடம் இருந்து பெருந்தொகையான வௌிநாட்டு நாணயம் மற்றும் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

கைதான சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version