சினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது?

Published

on

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது?

நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். அனிமல், புஷ்பா 2 போன்ற படங்களில் மூலமாக ராஷ்மிகாவின் கெரியர் தற்போது உச்சத்தில் இருக்கிறது.ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை அவர்கள் ரகசியமாகவே வைத்து இருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடித்து இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.இருப்பினும் அவர்கள் அது பற்றி எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது.தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version