இலங்கை
வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கையில் வாட்ஸ்அப் மூலம் இடம்பெற்றும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயல்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்யும் குழுக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய மோசடிகள் அதிகரித்துள்ளதாக கணனி அவசர பிரிவின் பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உங்களுக்குத் தெரியாத குழுக்களில் சேருவதன் மூலம் இந்த நிலைமை ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறி முன்கூட்டியே பணம் வசூலிக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.
வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங்கிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் கூட்டத்தில் சேர ஜூம் இணைப்பு மூலம் குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் செய்யப்படுகிறது.
கணக்குகள் ஹேக் செய்யப்படும்போது, பட்டியலில் உள்ள மற்றவர்களுக்கு பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை