பொழுதுபோக்கு
விரதம் இருங்க, மஞ்சள் தண்ணீர்ல குளிக்கணும்; பக்தி படத்தில் நடிகை கர்ப்பத்தை மறைத்த இயக்குனர், விதித்த கட்டுப்பாடுகள்!
விரதம் இருங்க, மஞ்சள் தண்ணீர்ல குளிக்கணும்; பக்தி படத்தில் நடிகை கர்ப்பத்தை மறைத்த இயக்குனர், விதித்த கட்டுப்பாடுகள்!
ஏ.பி.நாகராஜன் இயக்கிய பல புராணப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை கே.ஆர்.விஜயா அந்த கேரக்டருக்காக, விரதம் இருப்பது, மஞ்சள் தண்ணீரில் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சந்தித்ததாக ஏ.பி.நாகராஜன் மகள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.பழம்பெரும் நடிகைளில் முக்கியமானவர் கே.ஆர்.விஜயா. ஜெமினி கணேசன் ஜோடியாக கற்பகம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் ஏ.பி.நாகராஜன் இயக்கிய பல பக்தி படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கே.ஆர்.விஜயா, திரைத்துறையில் கர்ப்பமாக இருக்கும்போதும் பாடல் காட்சியில் நடித்துள்ளார்.இது குறித்து1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கததில் வெளியான படம் தான் திருவருட்செல்வர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, முத்துராமன், பத்மினி, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் முக்கிய கேரக்டரான ஆண்டாள் என்ற கேரக்டரில் நடித்தவர் தான் கே.ஆர்.விஜயா இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கும்போது, இயக்குனர் ஏ.பி.நாகராஜன், நடிகர்கள் யாரும் செருப்பு போட கூடாது என்று கட்டளையிட்டமாக நடிகை மனோரமா ஏ.பி.நாகராஜன் மகளிடம் தனது நினைவுகள் பற்றி கூறியுள்ளார்.அதேபோல் முக்கிய கேரக்டராக இருக்கும் ஆண்டாள் கேரக்டரில் நடிக்கும் கே.ஆர்.விஜயா, பெருமாள் எல்லோர் மனதையும் ஆண்டவர், அவரது மனதை ஆண்டதால் தான் ஆண்டாள் என்று பெயர் வந்தது. அந்த கேரக்ரில் நீங்க நடிக்கிறீங்க, அதனால் விரதம் இருக்க வேண்டும். அதன்பிறகு படப்பிடிப்புக்கு வரும்போது, மஞ்சள் நீரில் தான் குளித்துவிட்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் சரஸ்வதி சபதம் படத்தில் யானை மாலை போட்டதால், நீங்கள் மகாலட்சுமி ஆகிட்டீங்க, நீங்க நல்லா இருப்பீங்க என்று கூறினார். அதேபோல் நான் நல்லா இருக்கேன் என்று கே.ஆர்.விஜயா சொன்னாங்க.அதேபோல் ஒக்கேனக்கலில் படப்பிடிப்பு நடக்கும்போது செருப்பு போட கூடாது என்று சொல்லிவிட்டதால், மணலில் நடிக்கும்போது அதில் தண்ணீர் ஊற்றிவிடுவார்கள். அந்த தண்ணீரின் ஈரம் காய்வதற்குள் நடித்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று சொல்வாராம். அதேபோல் திருமால் பெருமை படத்தில் நடிக்கும்போது கே.ஆர்.விஜயா கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் அவரது வயிறு தெரியகூடாது என்பதால், சிறப்பாக படாக்கியிருப்பார் என்று கே.ஆர்.விஜயா சொன்னதாக ஏ.பி.நாகராஜன் மகள் கூறியுள்ளார்.