தொழில்நுட்பம்

3D ஒலி அனுபவம், 40dB ஏ.என்.சி… 100 மணி நேர பேட்டரியுடன் களமிறங்கிய சி.எம்.எஃப் ஹெட்போன் ப்ரோ!

Published

on

3D ஒலி அனுபவம், 40dB ஏ.என்.சி… 100 மணி நேர பேட்டரியுடன் களமிறங்கிய சி.எம்.எஃப் ஹெட்போன் ப்ரோ!

சி.எம்.எஃப் (Colour, Material, Finish) நிறுவனம் தற்போது ஓவர்-இயர் ஹெட்போன் (Over-ear Headphone) சந்தையிலும் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சி.எம்.எஃப் ஹெட்போன் ப்ரோ மாடல், 100 மணி நேர பேட்டரி ஆயுள் காரணமாக தனித்து நிற்கிறது.சாதாரண ஆடியோ திறன்களுக்கு பதில், இந்த ஹெட்போன் சி.எம்.எஃப்-இன் தனித்துவமான அம்சமான மாற்றக்கூடிய இயர் பேட்களைப் பெற்று உள்ளது. பயனர்கள் தேய்ந்துபோன இயர் பேட்களை மாற்றுவதன் மூலம் ஹெட்போனின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். தனிப்பயனாக்கப்பட்ட தோற்றத்திற்காக ஆரஞ்சு (அ) லைட் கிரீன் போன்ற துடிப்பான வண்ணங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதிலுள்ள புதிய “Energy Slider” வசதி மூலம், பயனர்கள் தங்கள் மனநிலைக்கு ஏற்ப ட்ரிபிள் (Treble) அல்லது பேஸ் (Bass) அளவுகளை மாற்றியமைக்க முடியும். மேலும், இது ப்ளே/பாஸ் (Play/Pause), ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), ஒலி அளவு (Volume) ஆகியவற்றை சரிசெய்யும் பன்முக கட்டுப்பாடாகவும் (Multifunctional Control) செயல்படுகிறது. கூடுதலாக, பிரத்யேக ‘கஸ்டமைசேஷன் பட்டன்’ மூலம் விருப்பமான ஏ.ஐ. அசிஸ்டெண்ட் (AI assistant) (அ) ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) அமைப்புகளை ஒரே தட்டலில் அணுக முடியும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க40mm நிக்கல் பூசப்பட்ட டயாபிரம்கள் (nickel-plated diaphragms) பொருத்தப்பட்டுள்ளதால், இந்த ஹெட்போன் மிகக் குறைந்த சிதைவுடன் (minimal distortion) துல்லியமான ஹைஸ் (crisp highs) ஒலியை வழங்குகிறது. SBC மற்றும் LDAC கோடெக் (Codec) ஆதரவு, உயர்தர வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்கை உறுதி செய்கிறது. மேலும், Nothing X செயலி மூலம் கூடுதல் தனிப்பயனாக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த ஹெட்போன் 40 dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) அம்சத்தையும் கொண்டுள்ளது. இது Nothing-இன் Headphones (1) மாடலுக்கு இணையானது. பேட்டரி ஆயுள் தான் இதன் சிறப்பம்சம். இது 100 மணி நேரம் வரை பிளேபேக் நேரத்தையும் அல்லது 50 மணி நேரம் டாக் டைமையும் வழங்குகிறது. இதன் விலை வரம்பில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்களை இது விஞ்சுகிறது. வெறும் 5 நிமிடங்கள் USB-C மூலம் சார்ஜ் செய்வதன் மூலம் கூடுதலாக 5 மணி நேரம் கேட்கும் நேரத்தைப் பெறலாம்.சி.எம்.எஃப் ஹெட்போன் ப்ரோ ro ஆனது IPX2 நீர் எதிர்ப்புத் திறன் மதிப்பீட்டைக் கொண்டுள்ளதால், இது நீடித்த உழைப்பிற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் (Cinema மற்றும் Concert மோடுகளுக்கு உகந்தது) மல்டி-சேனல் ப்ராசஸிங் மூலம் துல்லியமான திசை, தூரம் மற்றும் பாதையுடன் ஆழ்ந்த 3D ஒலியை மீண்டும் உருவாக்குகிறது.சி.எம்.எஃப் ஹெட்போன் ப்ரோ விலை அமெரிக்காவில் $99 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ8,000) ஆகும். எனினும், இந்த மாடலின் இந்திய வெளியீடு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது டார்க் கிரே (Dark Grey), லைட் கிரீன் (Light Green), மற்றும் லைட் கிரே (Light Grey) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version