பொழுதுபோக்கு

உருவம் பாரு எளிமை, அதுவே அவருக்கு வலிமை; ஆன்மீக பயணத்தில் ஏழையான ரஜினி: இமயமலை போட்டோ!

Published

on

உருவம் பாரு எளிமை, அதுவே அவருக்கு வலிமை; ஆன்மீக பயணத்தில் ஏழையான ரஜினி: இமயமலை போட்டோ!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என அன்போடு அழைக்கிறார்கள். வெறும் பஸ் நடத்துநராக இருந்த ரஜினி திரைத்துறையில் ஏற்படுத்திய தாக்கம் கடலளவு பெரியது. தனது ஸ்டைலினால் தனித்துவம் பெற்ற நடிகர் ரஜினி கடந்த 1975-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.பின்னர் ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினி பெரும்பாலும் எதிர்மறையான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வெளியான ‘கவிக்குயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். ’படிக்காதவன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’ ’வேலைக்காரன்’ ‘குரு சிஷ்யன்’, ‘ராஜாதி ராஜா’, ‘அண்ணாமலை’ ‘தளபதி’ என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலை வைத்தே அவரது படங்களில் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ‘சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும்’ போன்ற பாடல்கள் இன்று வரை மிகவும் பிரபலமான பாடலாக உள்ளது. அன்று முதல் தற்போது உள்ள இளம் இயக்குநர்கள் வரை அனைவரின் இயக்கத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என ரஜினி தெரிவித்தார்.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஒருவார கால பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் எளிமையாக ஒரு மரத்தின் பக்கத்தில் நின்று உணவு சாப்பிடும் புகைப்படங்கள்  சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் ‘என்னதான் பெரிய ஸ்டாராக இருந்தாலும் எப்போதும் ரஜினி எளிமையாகவே இருக்கிறார்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும், நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ’வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். இந்த முறை ’கூலி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததன் காரணமாக செல்லவில்லை. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version