டி.வி

ஓ ஜக்குஸி எல்லாம் இருக்கா.? Bigg boss Bedroom பார்த்து ஷாக்கான விஜய் சேதுபதி! வீடியோ இதோ

Published

on

ஓ ஜக்குஸி எல்லாம் இருக்கா.? Bigg boss Bedroom பார்த்து ஷாக்கான விஜய் சேதுபதி! வீடியோ இதோ

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.  கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்களை வெற்றிகரமாக  முன்னெடுத்தது.  இதன் ஒன்பதாவது சீசன்  இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. கடந்த சீசனை  விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.  இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் இருந்தாலும், அத்தனையையும் தனது இயல்பான பேச்சால் தவிடு பொடி ஆக்கினார். இந்த சீசனையும்  விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிலையில்,  பிக்பாஸ்  நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகின்றது. அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் குளியல் அறையில் ஜக்குஸி எல்லாம்  வைத்து அந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த விஜய் சேதுபதி  ‘ஓ ஜக்குஸி எல்லாம் இருக்கா’ என்று கேட்கிறார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு விதமாக  மாற்றங்கள் செய்யப்பட்டு  வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version