இலங்கை

கணவனுக்கு கள்ள உறவு; மனைவி செயலால் க்ஷாக்கான கிராமம்

Published

on

கணவனுக்கு கள்ள உறவு; மனைவி செயலால் க்ஷாக்கான கிராமம்

  உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், தௌலத்பூர் கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தனது கணவன் கள்ளத்தனத்தில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகித்த மனைவி, அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் துண்டித்து வீசி விட்டார்.

Advertisement

இந்தச் சம்பவம் அக்டோபர் (04) இரவு நடந்தது. பாதிக்கப்பட்ட கணவர் ராஜு (வயது 32) தற்போது உயிருக்காக போராடி வருகிறார்.

தௌலத்பூர் கிராமத்தில் வசிக்கும் ராஜு மற்றும் அவரது மனைவி நேஹா (வயது 28) திருமணமாகி ஐந்து ஆண்டுகளானது.

இருவருக்கும் 4 வயது சிறுவன் உள்ளார்.

Advertisement

உள்ளூர் தகவல்களின்படி, ராஜு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று திரும்புவதில்லை என்பதால், நேஹாவுக்கு அவரது கள்ளத்தனத்தைப் பற்றிய சந்தேகம் எழுந்தது.

இந்த சந்தேகம் கடந்த சில மாதங்களாக வலுக்கியது.சனிக்கிழமை (04) இரவு ராஜு தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கோபத்தில் கொதித்த நேஹா அவரது பக்கத்தில் வந்து, மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அந்தரங்க உறுப்பை முழுமையாக துண்டித்தார்.

உயிருக்கு போராடி கதறிய ராஜுவின் அழைப்புக் குரலை கேட்டு அவரது தந்தை மஹிபால் (வயது 60) அறைக்கு ஓடினார்.

Advertisement

ரத்தம் கசிந்து கிடந்த மகனைப் பார்த்து அதிர்ந்த மஹிபால் உடனடியாக அவரை தனது பைக் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மருத்துவர்கள் ராஜுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதன் பின், சிகிச்சைக்காக மோரடாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து பொலிசார் உடனடியாக தௌலத்பூர் சென்று நேஹாவை கைது செய்தது.

Advertisement

நேஹா பொலிஸிடம்,

“அவர் என்னை ஏமாற்றினார். கள்ளத்தனத்தில் ஈடுபட்டிருந்தார். என்னால் தாங்க முடியவில்லை அதனால் இதனை செய்ததாக பொலிஸ் நேஹா கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.   

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version