தொழில்நுட்பம்
காஃபி குடிக்கும் நேரத்தில் 100% சார்ஜ்… உலகிலேயே அதிவேக 320W சார்ஜிங் வசதி அறிமுகம்!
காஃபி குடிக்கும் நேரத்தில் 100% சார்ஜ்… உலகிலேயே அதிவேக 320W சார்ஜிங் வசதி அறிமுகம்!
ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 45W வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கி வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த ரியல்மீ (Realme) நிறுவனம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அந்நிறுவனம் தற்போது 320W அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 320W தொழில்நுட்பம், இதற்கு முன்னர் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய 300W அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை விட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.வெறும் 4.5 நிமிடங்களில் முழு சார்ஜ்ரியல்மீ நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 4,420mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வெறும் 4 நிமிடங்கள் 30 வினாடிகளில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் எனத் தெரிவித்துள்ளது. தற்போது வரை அறிமுகப்படுத்தப்பட்ட சார்ஜிங் தொழில் நுட்பங்களில் இதுதான் அதிவேகமானது ஆகும்.இதற்கு முன்னர், சியோமி நிறுவனம் 4000mAh திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை 5 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்து காட்டியிருந்தது. சியோமி, ஓப்போ, ஒன்பிளஸ் மற்றும் தற்போது ரியல்மீ ஆகிய சீன நிறுவனங்கள், அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றன.ரியல்மீ இதற்கு முன்னர் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு ஸ்மார்ட்போனை 10 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்து காட்டியிருந்தது. அந்த 240W வசதியை அந்நிறுவனம் சீனாவில் வெளியிட்ட ரியல்மீ GT 3 ஸ்மார்ட்போனில் வழங்கியிருந்தது.தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 320W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை, அடுத்து ரியல்மீ வெளியிட உள்ள உயர்தர (Flagship) ஸ்மார்ட்போன்களில் நாம் எதிர்பார்க்கலாம். இந்த அதிவேக தொழில்நுட்பம் மூலம், பயனர்கள் ஒரு காபி குடிக்கும் குறுகிய நேரத்தில் தங்கள் ஸ்மார்ட்போனை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும்.