இந்தியா

புதுச்சேரி விவசாயிகளுக்கு 100% மானியத்தில் மணிலா விதைகள் வழங்கப்படும்: அமைச்சர் தேனி. ஜெயக்குமார் பேட்டி

Published

on

புதுச்சேரி விவசாயிகளுக்கு 100% மானியத்தில் மணிலா விதைகள் வழங்கப்படும்: அமைச்சர் தேனி. ஜெயக்குமார் பேட்டி

புதுச்சேரி விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் மணிலா விதைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மணிலா பயிர்மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வருகிற ரபி பருவத்தில் (கார்த்திகை பட்டம்) அகில இந்திய அளவில் எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிடவும், எண்ணெய் வித்து பயிர்களுக்கான தேசிய இயக்கத்தை அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் எண்ணெய் வித்து பயிரான மணிலா சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்குஹெக்டேர் ஒன்றுக்கு (வேளாண் பல்கலைக்கழக பரிந்துரையான 150 கிலோ விதையளவு) மத்திய அரசின்தேசிய விதைகள் கழகத்தின் சான்றிதழ் பெற்று ஜி-5 என்று பொதுவாக அழைக்கப்படும் கிர்னார்-5 உயர்ரக மணிலா விதைகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.100 சதவீதம் மானியம் விதையளவுக்கு உண்டான மானியத்தில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்கும். அதனுடன் புதுச்சேரி மாநில அரசு வழங்கும் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் பயிர் உற்பத்தி மானியமும் சேர்த்து வழங்கப்படும். இது தொடர்பாக வேளாண்துறை மூலம் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள உழவர் உதவியகத்தில் பெயர்களை,  சாகுபடி செய்ய இருக்கும் பரப்பளவையும் நாளை மறுநாளுக்குள் (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version