வணிகம்

மொபைல் முதல் வீடு வரை: தள்ளுபடியும், தவணைகளும்- கிரெடிட் கார்டின் 45 ஆண்டு அசுர வளர்ச்சி எப்படி?

Published

on

மொபைல் முதல் வீடு வரை: தள்ளுபடியும், தவணைகளும்- கிரெடிட் கார்டின் 45 ஆண்டு அசுர வளர்ச்சி எப்படி?

இன்று நம் கையில் இருக்கும் கிரெடிட் கார்டு (Credit Card), ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய ஒரு ஆடம்பரப் பொருளாக இருந்தது. ஆனால், கடந்த 45 ஆண்டுகளில் அதன் பயணம் நம்ப முடியாத அளவுக்குத் தாண்டி வந்துள்ளது! 1980 ஆம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) வெளியிட்ட ‘சென்ட்ரல்கார்ட்’ (Centralcard) என்ற ஒற்றை அட்டையில் தொடங்கியது இந்தப் புரட்சி. இன்று, ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 11 கோடிக்கும் அதிகமான ஆக்டிவ் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.முன்பு, அதிக சம்பளம் வாங்கும் ‘மேல்தட்டு’ மக்களுக்கு, அவர்களின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து மட்டுமே கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பெரிய வங்கிகள் மட்டுமல்ல, AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி போன்ற சிறிய நிதி வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன.இதுகுறித்து ஃபால்கன் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரியங்கா கன்வர் கூறுகையில், “கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களின் சுயவிவரம் வியத்தகு முறையில் விரிவடைந்துள்ளது. டையர் 2 மற்றும் டையர் 3 நகரங்களில் கூட சிறிய நிதி வங்கிகளின் விநியோக வலையமைப்பு, கிரெடிட் கார்டுகளைச் சென்றடையாத சந்தைகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளது” என்கிறார்.சலுகைகளும், தவணை முறைகளும்: கிரெடிட் கார்டுகள் இவ்வளவு வேகமான வளர்ச்சியைப் பெற ஒரு முக்கிய காரணம், பெரிய சூப்பர் மார்கெட் வழங்கும் ஆழ்ந்த தள்ளுபடிகளும் (Deep Discounts) 0% வட்டி தவணை முறைகளும்தான்! மொபைல் போன்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது சிறப்புத் தள்ளுபடிகள் கிடைப்பது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது. மேலும், பொருட்களை வாங்கும்போதே 3, 6, 9 அல்லது 12 மாதத் தவணைகளில் 0% வட்டி செலுத்தும் வசதி கிடைத்ததால், இதன் பயன்பாடு பலமடங்கு அதிகரித்தது.கிரெடிட் ஹிஸ்டரி இல்லாதவர்களுக்கு ஒரு வரம்: ஒருவருக்குக் கடன் வரலாறு (Credit History) இல்லையென்றால் கிரெடிட் கார்டு கிடைப்பது கடினம். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக வந்ததுதான் ‘செக்யூர்ட் கார்டு’ (Secured Cards)! ஒரு ஃபிக்சட் டெபாசிட்டை (Fixed Deposit) பிணையாக (Collateral) வைத்து, அதற்குக் கிரெடிட் கார்டு பெறலாம். இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி, காலப்போக்கில் தங்கள் கடன் தகுதியை படிப்படியாக உயர்த்துவதன் மூலம், பிற்காலத்தில் சாதாரண கிரெடிட் கார்டுகளைப் பெற முடியும்.காலப்பயணத்தில் கிரெடிட் கார்டு!1990-2000: 1991 பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக பன்னாட்டு வங்கிகள் இந்தியாவுக்குள் நுழைந்தன. ரிவார்டு பாயின்ட்ஸ் மற்றும் மோசடிகளுக்கு ‘ஜீரோ லையபிலிட்டி’ போன்ற சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.2000-2010: இணையப் புரட்சி வெடித்தது. ஐஆர்சிடிசி (2002), மேக் மை ட்ரீப் (2005), ஃப்ளிப்கார்ட் (2007) போன்ற ஆன்லைன் தளங்களின் வருகையால் கிரெடிட் கார்டு ஒரு அத்தியாவசிய ஆன்லைன் கட்டண முறையாக மாறியது.2010-2020: 2012-ல் என்.பி.சி.ஐ. அறிமுகப்படுத்திய உள்நாட்டு நெட்வொர்க் ஆன ருபே (RuPay), விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்ட் (Mastercard)-க்கு சவால் விடுத்தது. RuPay, Tier-2 மற்றும் Tier-3 நகரங்களில் கணிசமான வளர்ச்சியைக் கண்டது.2020-க்கு பிறகு: செப்டம்பர் 2022-ல் புழக்கத்தில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது. மேலும், UPI-யுடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள், இந்த டிஜிட்டல் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.ஒரு சிறிய பிளாஸ்டிக் அட்டையாகத் தொடங்கி, இன்று டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனையின் முக்கிய அங்கமாக கிரெடிட் கார்டு உருவெடுத்துள்ளது. 45 ஆண்டுகால இந்த வளர்ச்சி, இந்தியாவின் பொருளாதார மாற்றத்தின் வேகத்தைக் குறிக்கிறது என்றால் மிகையல்ல!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version