இலங்கை

யாழில் வீடொன்றில் அரங்கேறிய சம்பவம்; அச்சத்தில் உறைந்த வீட்டினர்

Published

on

யாழில் வீடொன்றில் அரங்கேறிய சம்பவம்; அச்சத்தில் உறைந்த வீட்டினர்

 யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் வெளிக்கதவை மூடிவிட்டு வீட்டிற்குள் இருந்த வேளை இரவு 10.45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisement

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராது அயலவர்களை அழைத்த போது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version