பொழுதுபோக்கு
30 வயது மூத்தவருக்கு 3-வது மனைவி; கடைசிவரை கணவர் இயக்கிய படங்களில் மட்டுமே நடித்தவர்: இந்த நடிகை யார் தெரியுமா?
30 வயது மூத்தவருக்கு 3-வது மனைவி; கடைசிவரை கணவர் இயக்கிய படங்களில் மட்டுமே நடித்தவர்: இந்த நடிகை யார் தெரியுமா?
சினிமாத்துறையை பொருத்தவரை, இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள் திருமணம் செய்துகொள்வது, நடிகை இயக்குனரை திருமணம் செய்துகொள்வது வழக்கம். ஆனால் ஒரு நடிகை தான் நடித்த அனைத்து படமும் ஒரே இயக்குனர் இயக்கத்தில் தான் நடித்துள்ளார். பின்னாளில் அந்த இயக்குனருக்கே 3-வது மனைவியாக ஆகிவிட்டார். அந்த நடிகை யார் தெரியுமா?இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:பாலிவுட் சினிமாவில், 10-க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், அனைத்து படங்களையும் ஒரே இயக்குனரின் இயக்கத்தில் நடித்தவர் தான் நடிகை சந்தியா சாந்தாராம். இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்திருந்த இவர், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், நேற்று (அக்டோபர் 4)தனது 94-வது வயதில் மரணமடைந்தார். அவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும் நடிகருமான வி.சாந்தாராமின் மூன்றாவது மனைவி ஆவார்.சந்தியா தனது திரையுலகப் பயணம் முழுவதும் வி. சாந்தாராமின் படங்களில் மட்டுமே நடித்தார். தனது தொழில் வாழ்க்கையில் ஒரே ஒரு திரைப்பட இயக்குனருடன் மட்டும் பணியாற்றிய சில நடிகைகளில் இவரும் ஒருவர். 1932-ல் கொச்சியில் பிறந்த சந்தியா, நாடகத் துறையுடன் வலுவான தொடர்பு கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை நாடக அரங்கில் திரைக்குப் பின்னால் பணியாற்றுபவராக இருந்தார், மேலும் அவரது சகோதரிகளும் நாடகங்களில் ஈடுபட்டனர். எனினும், சந்தியாவின் ஆசை திரைப்படங்களில் நடிப்பதில்தான் இருந்தது.1951-ல், வி.சாந்தாராமின் இரண்டாவது மனைவியான ஜெயஸ்ரீயின் குரலை ஒத்திருந்ததால், சாந்தாராம் இவரைக் கண்டறிந்தார். அவர் இவருக்கு சந்தியா என்று பெயரிட்டார். அதன்பிறகு, வி.சாந்தாராமின் 1951-ம் ஆண்டு மராத்தி திரைப்படமான ‘அமர் பூபாலி’யில் நடிக்கத் தொடங்கினார். நடிப்பு பயிற்சி இல்லை என்றாலும், ஒரு சிறந்த நடனக் கலைஞரான அவர், தனது கணவரின் இயக்கத்தில் 10-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பர்ச்சாயின் (1952), தீன் பத்தி சார் ராஸ்தா (1953), ஜனக் ஜனக் பாயல் பாஜே (1955), தோ ஆங்கேன் பாரா ஹாத் (1958), சேஹ்ரா (1963), ஜல் பின் மச்சிலி நிருத்ய பின் பிஜ்லி (1971) குறிப்பிடத்தக்க படங்களாகும்.மேலும், 1961-ல் வெளியான ஸ்திரீ திரைப்படத்தில் சாந்தாராமுக்கு ஜோடியாகவும் நடித்திருந்த சந்தியா, 1966-ல் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் இருமொழியாக வெளியான லட்கி சஹ்யாத்ரி கி திரைப்படத்திலும் சந்தியா நடித்தார். அவர் கடைசியாக 1975-ம் ஆண்டு மராத்திப் படமான சந்தனாச்சி சோலி ஆங் ஆங் ஜாலி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை (மராத்தி) வென்றார்.சந்தியா நடிப்புக்கு அப்பால், சாந்தாராமின் படங்களுக்கு நடன அமைப்பு மற்றும் பிற ஆக்கப்பூர்வமான அம்சங்களுக்கும் பங்களித்து ஒரு கூட்டுப் படைப்புக் கலைஞராகவும் விளங்கினார். ‘நவரங்’ திரைப்படம் உருவான விதம் சாந்தாராமின் இரண்டாவது மனைவி ஜெயஸ்ரீ அவரை விட்டுப் பிரிந்த பிறகு, 1956-ல் அவர் சந்தியாவை மணந்தார். அவரது மிகவும் மறக்கமுடியாத நடிப்பு, திருமணத்திற்குப் பிறகு 1959-ல் வெளியான இந்தித் திரைப்படமான நவரங் மூலம் கிடைத்தது.திருமணம் ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு, சாந்தாராமுக்கு கண் பார்வை குறையத் தொடங்கியது. மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினார், ஆனால் கவனித்துக்கொள்ள ஒரு முழுநேர செவிலியரை அமர்த்தவும் பரிந்துரைத்தார். அப்போது, சந்தியா தனது கணவரும் இயக்குநருமான சாந்தாராமை முழுமையாகப் புரிந்துகொண்டதால், அவரே கவனித்துக்கொள்வதாகக் கூறினார்.சாந்தாராம் நேர்மறையாக உணர்வதற்காக, அவர் தனது அறையை பளபளப்பான பூக்கள் நிறைந்ததாக மாற்றினார். அறுவை சிகிச்சை மற்றும் குணமடைந்த பிறகு, சாந்தாராம் அங்குள்ள வண்ணமயமான மலர்களைப் பார்த்தபோதுதான், அவருக்கு நவரங் திரைப்படத்திற்கான யோசனை வந்தது. வி. சாந்தாராமும், சந்தியா சாந்தாராமும் 1991-ல் அவரது இறப்பு வரை திருமண வாழ்க்கையில் நீடித்தனர். அவர்களுக்கு சொந்தமாக குழந்தைகள் இல்லை.அவர் கடைசியாக 2009-ம் ஆண்டு வி.சாந்தாராம் விருதுகள் வழங்கும் விழாவில், நவரங் திரைப்படத்தின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது பொதுவெளியில் காணப்பட்டார்.சந்தியா தனது கடைசி நாட்களில் மும்பையில் உள்ள ராஜ்கமல் ஸ்டுடியோவில் தங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, வி.சாந்தாராம் மற்றும் ஜெயஸ்ரீயின் மகனும், சந்தியாவின் வளர்ப்பு மகனுமான கிரண் சாந்தாராம், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம், “அவருக்கு என் தந்தையுடன் சொந்தமாக குழந்தைகள் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமான பகுதி, ஆனால் அவர் என்னையும் என் சகோதரிகளையும் தன்னுடைய குழந்தைகளாகவே நடத்தினார். அவர் மிகவும் அன்பானவர், அற்புதமாக சமைப்பவர், மேலும் அன்புடன் எங்களுக்கு உணவளிப்பார் என்று கூறினார்.