பொழுதுபோக்கு

Bigg Boss Tamil Season 9 Launch LIVE Updates: பெரும் எதிர்பார்ப்பில் பிக்பாஸ் 9 சீசன் – போட்டியாளர்கள் யார் யார்?

Published

on

Bigg Boss Tamil Season 9 Launch LIVE Updates: பெரும் எதிர்பார்ப்பில் பிக்பாஸ் 9 சீசன் – போட்டியாளர்கள் யார் யார்?

Bigg Boss Tamil Season 9 Launch LIVE Updates Today: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் அவர் விலகியதால், அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார். 8-வது சீசன் வெற்றிகரகமாக முடிந்த நிலையில், 9-வது சீசன் இன்று (அக்டோபர் 5) தொடங்க உள்ளது.எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கி அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்கை சரியாக செய்து, தங்களின் உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சண்டை, காதல், கண்ணீர், வருத்தம், கொண்டாட்டம், என அனைத்தும் கலந்த கமர்ஷியல் நிகழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக இதில் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் மோதல் ரசிகர்கள் மத்தியில், ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், பல பிரபலங்கள் சினிமா மற்றும் சின்னத்திரையில், தற்போது தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 5) தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version