இந்தியா

ஆட்சியாளர்களை பார்த்து மிரளும் கவர்னர்; கை- லாஸ் நாதனாக மாறிவிட்டார்: போர் கொடி தூக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ

Published

on

ஆட்சியாளர்களை பார்த்து மிரளும் கவர்னர்; கை- லாஸ் நாதனாக மாறிவிட்டார்: போர் கொடி தூக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ

புதுச்சேரியில் பா.ஜ.க – என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. ஆட்சியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார் புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த கட்சி மேலிடம் சாய் சரவணகுமாரிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் போராட்டத்தை தவிர்த்து, சட்டசபை வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு கண்களையும் குத்தி பார்க்கின்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ் சிந்தனை உள்ள வலிமையான பா.ஜ.க-வை குழி தோண்டி புதைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆளும் அரசில் உள்ள 16 சட்டமன்ற உறுப்பினர்களின் 4 பேர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு அமைச்சரவை நடத்துவது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல். ஆதி திராவிடர்களுக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்படுவது என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. நல்ல மனசு உள்ளவர்களிடம் ஆட்சி இருந்தால் அது நல்லாட்சியாக  இருக்கும். இல்லை என்றால் அது காசு பார்க்கும் ஆட்சியாக தான் இருக்கும் மனதை பார்க்கிற ஆட்சியாக இருக்காது. நரேந்திர மோடி உத்தரவின் பேரில் நான் ராஜினாமா செய்தேன். அமைச்சர் பதவி ஜான் குமாருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை இலக்கா ஒதுக்கப்படவில்லை. இலாகா ஒதுக்காமல் இருப்பது ஜாக்குமாருக்கு அசிங்கமில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு தான் அசிங்கம். புதுச்சேரியில் தினந்தோறும் கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகள் எதற்காக நடக்கிறது என்று தெரியாமலே கொலைகள் நடக்கிறது. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய உள்துறை அமைச்சர் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உல்லாச பயணம் சென்று கொண்டிருக்கிறார். கல்வித்துறையில் இயக்குனர் பதவி காலியாகி 100 நாட்களாகிறது. இதுவரை ஒரு இயக்குனர் அங்கு நியமிக்கப்படவில்லை. புதுச்சேரியில் உள்ள ஆளுநர் ஆட்சியாளர்களை பார்த்து மிரளுகிறார். பிரதமர் நரேந்திர மோடியிடம் நாங்கள் கைலாஷ்நாதனை கேட்டோம். ஆனால் இவரோ கை-லாஸ் நாதனாக மாறிவிட்டார். கவர்னர் என்பவர் மக்களுக்காக பணி செய்ய வேண்டும் தைரியமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எனது தொகுதியில் பள்ளி கல்லூரி அருகிலேயே ரெஸ்டோ பார்கள் இயங்கி வருகிறது. அதை கூட தடுக்க முடியவில்லை. ஆனால் இது குறித்து புகார் அளித்தால் என்னிடமே அறிக்கை கேட்கிறார் அவர். ஆளுநர் மாளிகை எதிரே சட்டமன்றம் எதிரே ரெஸ்டோ பார்ட் திறந்தால் ஆளுநர் சும்மா இருப்பாரா? இதற்கும் அறிக்கை கேட்பாரா? தான் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நான் எதற்காக ஒரு ஆளுநரை சந்திக்க வேண்டும். நான் என்ன வேலை இல்லாமலா இருக்கிறேன்? எனது தொகுதியில் 800 ஏக்கர் இடத்தை அரசு கையகப்படுத்தியது. 25 ஆண்டு காலமாக அந்த இடத்தில் ஒரு தொழிற்சாலைகளை கூட இவர்களால் கொண்டு வர முடியவில்லை,. முடியாத பட்சத்தில் இடத்தை உரிமையாளர்களிடமே திரும்ப வழங்க வேண்டும். எனது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மக்களுடைய உரிமையை கேட்டு வாங்கி கொடுப்பதுதான் ஒரு எம்.எல்.ஏ-வின் எம்.பி-யின் கடமை. என்னுடைய கடமையை நான் கேட்கிறேன்,ம க்களுக்காக தான் கேட்கிறேன் அப்படி இல்லை என்றால், நாங்கள் தட்டிக் வாங்குவோம்” என்று ஆவேசமாக பேசினார் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version