சினிமா
இதுதான் துருவ் விக்ரம்ட முதல்படமா..? அவரே கொடுத்த பேட்டி வைரல்
இதுதான் துருவ் விக்ரம்ட முதல்படமா..? அவரே கொடுத்த பேட்டி வைரல்
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை போன்ற ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக கால் பதித்தார். தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்தப் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நடிகர் துருவ் விக்ரம் கொடுத்த பேட்டி ஒன்றில், என் பெயர் துருவ்.. இதுவரை நான் ரெண்டு படங்கள் தான் பண்ணி இருக்கேன்.. அந்த ரெண்டு படங்களை நீங்க பாக்கலனாலும் பரவாயில்லை.. ஆனால் பைசன் படம் கண்டிப்பா பாக்கணும்.. இதுதான் என் உண்மையான முதல் படம்.. இதுக்காக நான் 100% உழைப்பை கொடுத்திருக்கேன்.. மாரி செல்வராஜ் சார் இறங்கி சம்பவம் பண்ணி இருக்கார்.. குடும்பத்தோட, காதலியோட ,காதலனோட போங்க.. ஆனா படத்தை பார்க்காமல் விடாதீங்க என தெரிவித்துள்ளார். அதேபோல மாரி செல்வராஜ், இந்த படத்திற்காக இரண்டு வருடம் பயிற்சி எடுத்து, படப்பிடிப்புக்காக நிறைய நாட்கள் ஒதுக்கி தன்னை அர்ப்பணித்துள்ளார் துருவ். பலரும் இந்த படத்தை பார்த்து நீ சாதிச்சிட்ட, நினைச்சதை அடஞ்சிட்டேன்னு சொன்னாங்க.. தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக திருவ் இருப்பார் என்று பாராட்டியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.