தொழில்நுட்பம்

டைப்பிங் தேவையில்ல, நண்பரிடம் பேசுவதுபோல்… சாட்ஜிபிடி-யின் புதிய ‘வாய்ஸ்’ அம்சம்!

Published

on

டைப்பிங் தேவையில்ல, நண்பரிடம் பேசுவதுபோல்… சாட்ஜிபிடி-யின் புதிய ‘வாய்ஸ்’ அம்சம்!

சாட்ஜிபிடி செயலியானது, நாம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) உரையாடும் விதத்தை முற்றிலும் மாற்றியுள்ளது. டைப்பிங் செய்வதைவிட, குரல் வழியில் (வாய்ஸ்) உரையாடுவது மிகவும் வேகமாகவும், இயல்பான உரையாடலை உணர்த்தும் விதமாகவும் உள்ளதால், சாட்ஜிபிடி அதன் புதிய வாய்ஸ் (Voice) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வாய்ஸ் வசதி மூலம், பயனர்கள் ஏ.ஐ. உடன் நேரடியாக குரல் வழியாகப் பேசலாம். கைகள் பிஸியாக இருக்கும்போது, வாகனம் ஓட்டும் போது அல்லது சமையல் செய்யும்போது கூட, ஏ.ஐ. உடனான தொடர்பு தடையின்றி இயல்பாக இருக்கும். நாம் சொல்வதை கேட்கும் ஏ.ஐ, அதைப் புரிந்துகொண்டு உடனடியாகத் துல்லியமான பதில்களை வழங்கும்.சாட்ஜிபிடி வாய்ஸ் வசதியை இயக்குவது எப்படி?கைகள் தேவையில்லாத (Hands-free) உதவியைப் பெற, சாட்ஜிபிடி வாய்ஸ் அம்சத்தை இயக்குவது மிகவும் எளிது. அதற்கான எளிய வழிமுறைகள்.சாட்ஜிபிடி ஆப்-ஐ திறக்கவும்: வாய்ஸ் சாட்டிங் பயன்படுத்த, முதலில் உங்க ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள சாட்ஜிபிடி ஆஃப்-ஐ திறக்கவும்.செட்டிங்ஸ் செல்லவும்: ஆப்பில் உள்ள செட்டிங்ஸ் (Settings) பிரிவில் சென்று, ‘குரல்’ (Voice) அல்லது ‘பேச்சு’ (Speech) என்பதைக் கண்டறியவும்.மைக்ரோஃபோன் அனுமதி: சாட்ஜிபிடி செயலி உங்க மைக்ரோஃபோனைப் பயன்படுத்த அனுமதிக்கவும்.குரலைத் தேர்ந்தெடுக்கவும்: சில வெர்ஷன்களில், ஏ.ஐ-இன் குரல் அல்லது அது பேசும் மொழியை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கலாம்.பேசத் தொடங்கவும்: இறுதியாக, மைக் ஐகானைத் (Mic Icon) தட்டி, உங்க கேள்வியைப் பேசத் தொடங்கினால், ஏ.ஐ. உடனடியாகப் பதிலளிக்கத் தயாராக இருக்கும்.துல்லியமான பதிலைப் பெற சில குறிப்புகள்வாய்ஸ் வசதியை இயக்குவது எளிதானாலும், ஏ.ஐ. உடன் பேசும்போது அது நீங்க சொல்வதை மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்டு பதிலளிக்க சில எளிய குறிப்புகளைப் பின்பற்றலாம்.ஏ.ஐ எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும், மெதுவாகவும் பேசவும். குழப்பத்தை தவிர்க்க, உங்கள் வாக்கியங்களை சிறியதாகவும் சுருக்கமாகவும் வைக்கவும். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையில் ஒரு கணம் இடைவெளி விடுங்கள். இது தகவலைச் செயலாக்க ஏ.ஐ-க்கு அவகாசம் அளிக்கும். சிறந்த துல்லியத்திற்காக, பின்புல இரைச்சலைக் குறைத்து, சத்தம் இல்லாத இடத்திலிருந்து பேசுங்கள்.சாட்ஜிபிடி வாய்ஸ் மூலம் நீங்க என்னவெல்லாம் செய்யலாம்?சாட்ஜிபிடி வாய்ஸ் வசதியை பயன்படுத்துவது டைப்பிங் செய்வதைவிட வேகமானது மட்டுமல்ல, நீங்க ரோபோவிடம் அல்லாமல் உண்மையான நபரிடம் பேசுவது போன்ற உணர்வையும் தரும். இதன் மூலம் செய்யக்கூடியவை. வானிலை, கணித உதவி அல்லது பொது அறிவு கேள்விகளை உடனே கேட்டுத்தெரிந்துகொள்ளலாம். நீளமான மின்னஞ்சல்கள் அல்லது அறிக்கைகளை டைப்பிங் செய்வதற்குப் பதிலாகப் பேசலாம். ஏ.ஐ. உடன் பேசுவதன் மூலம் புதிய மொழிகளைப் பயிற்சி செய்யலாம். புதிய யோசனைகள், சுருக்கங்கள் அல்லது ஸ்கிரிப்ட்களை விரைவாக உருவாக்கலாம். ரிமைண்டர் அமைக்கலாம் (Reminders), செய்ய வேண்டிய லிஸ்ட் உருவாக்கலாம் அல்லது வழிமுறைகளைக் கேட்டுப் பெறலாம். வேலை, கற்றல் அல்லது தனிப்பட்ட பயன்பாடு என எதுவாக இருந்தாலும், இந்தக் குரல் வழியான உரையாடல் வசதி ஏ.ஐ. உடனான உங்க சாட்டிங் மிகவும் வசதியானதாகவும், எளிதானதாகவும் மாற்றும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version