சினிமா
பேசுறது மட்டும் சினிமா வசனம்… ஆனா செயலில.. விஜயை வார்த்தைகளால் விளாசித்தள்ளிய பிரேமலதா.!
பேசுறது மட்டும் சினிமா வசனம்… ஆனா செயலில.. விஜயை வார்த்தைகளால் விளாசித்தள்ளிய பிரேமலதா.!
கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை நேரடியாக சந்தித்து ஆதரவையும் நிதி உதவியையும் கையில் வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வலியுறுத்தியுள்ளார்.பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், விஜய் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் நேரிலேயே சந்தித்து, அவர்களின் வேதனையை நேரடியாகக் கேட்டுக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த 41 குடும்பங்களையும் நேரில் சென்று சந்தித்தேன். உங்கள பாக்கத்தான் அந்த மக்கள் வந்தாங்க அந்த குடும்பங்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும். பேசுறது மட்டும் சினிமா வசனம் அடுத்த நிமிஷம் Flight பிடிச்சு வீட்டுக்கு போனவர் தான் இப்போ வரைக்கும் வெளியவே வரல. அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நீங்கள் அறிவிச்ச காசை அவங்க கைல கொடுக்கணும்..” என்று பிரேமலதா தற்பொழுது வலியுறுத்தியுள்ளார். கரூர் சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகளவு கவனம் ஈர்த்தது. பல்வேறு கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தனர். அத்தகைய சூழ்நிலையில், பிரேமலதா அவர்களின் கோரிக்கை, அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளைக் கொண்டு வந்துள்ளது.