இலங்கை
விமல் வீரவன்ச பொலிஸில் ஆஜராகவில்லை
விமல் வீரவன்ச பொலிஸில் ஆஜராகவில்லை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று (06) தங்காலை பொலிஸில் ஆஜராக போவதில்லையென்றும், அதற்காக தங்காலை பொலிஸாரிடம் வேறு திகதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (06) தங்காலை பொலிஸாரிடம் ஆஜராக வேண்டும் என தங்காலை தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர் நேற்று (05) குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அளித்த வாக்குமூலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.