சினிமா
100 நாள் பிக்பாஸ் 9 தொகுத்து வழங்க இத்தனை கோடி வாங்குகிறாரா விஜய் சேதுபதி
100 நாள் பிக்பாஸ் 9 தொகுத்து வழங்க இத்தனை கோடி வாங்குகிறாரா விஜய் சேதுபதி
100 நாட்கள் சின்னத்திரை ரசிகர்களுக்கு இடைவேளை இல்லா என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகிறது.ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கியுள்ளது. ஆரம்பித்தது போல் சந்தோஷமாக வீடு இருக்குமா அல்லது அடிதடி சண்டை, சலசலப்பு, கோபம், வெறுப்பு என வீடே தலைகீழாக மாறுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.இந்த 9வது சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத போட்டியாளர்கள் பலர் உள்ளனர், எப்படி விளையாட போடுகிறார்கள் என்பது போக போக தெரிந்துவிடும்.போட்டியாளர்களை தாண்டி தற்போது பிக்பாஸ் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.அதாவது 9வது சீசனிற்காக விஜய் சேதுபதி ரூ. 75 கோடி சம்பளம் வாங்குகிறாராம், இந்த தகவல் தான் இத்தனை கோடியா என ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.