வணிகம்
Gold Rate Today, 06 அக்டோபர்: ஜெட் வேகத்தில் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.11,000-ஐ கடந்து புதிய உச்சம்!
Gold Rate Today, 06 அக்டோபர்: ஜெட் வேகத்தில் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.11,000-ஐ கடந்து புதிய உச்சம்!
கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இம்மாதத் தொடக்கத்திலும் தனது ஏற்ற-இறக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கமானது இன்றும் வழக்கம் போல தனது விலையைக் கடுமையாக உயர்த்தி இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இன்று (06.10.2025) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் (04.10.2025) தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.வெள்ளி விலையும் அதிகரிப்பு:தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.166-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம் (சவரனுக்கு)தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது, திருமண தேவை மற்றும் முதலீட்டாளர்களிடையே கலவையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.