சினிமா

அட நடிகை சீதாவா இது, புதிய லுக்கில் அவர் வெளியிட்ட வீடியோ

Published

on

அட நடிகை சீதாவா இது, புதிய லுக்கில் அவர் வெளியிட்ட வீடியோ

பாலச்சந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகிகளில் ஒருவர் தான் நடிகை சீதா.ஆண் பாவம் படத்தில் அறிமுகமானவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து பார்த்திபனுடன் புதிய பாதை உட்பட பல வெற்றிப் படங்களில் நடிக்க மிகவும் பிரபலமானார்.அந்த படத்தில் நடிக்கும் சீதா-பார்த்திபன் இடையே காதல் மலர இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் களமிறங்கியவர் சின்னத்திரையில் அதிகம் பயணம் செய்கிறார்.தற்போது சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து சமையல், மாடித் தோட்டம் போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். நீளமான சுருள் முடியை கொண்ட நடிகை சீதா திடீரென மொட்டை அடித்துள்ளார்.அப்படியே வீடியோவும் போட இவர் ஏன் திடீர் மொட்டை அடித்தார், இந்த லுக்கும் நன்றாக தான் இருக்கிறது என ரசிகர்கள் நிறைய கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version