சினிமா
இண்டஸ்ட்ரி ஹிட் லோகா படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை
இண்டஸ்ட்ரி ஹிட் லோகா படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை
மலையாளத்தில் இருந்து வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ள திரைப்படம் லோகா. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக நடிக்க நஸ்லன், சாண்டி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் டொமினிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்தார்.ரூ. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 300+ கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மலையாலத்திலேயே அதிக வசூல் செய்த படமாக லோகா மாறியுள்ளது.இதற்குமுன் மோகன்லாலின் எம்புரான் படம் இண்டஸ்ட்ரி ஹிட் சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை விட அதிக வசூல் செய்து, முதலிடத்தை லோகா பிடித்துள்ளது.