உலகம்

இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் …

Published

on

இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் …

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி இருஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காஸா மீதான போர் தொடங்கி இன்று ( 7) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

Advertisement

மேலும், இஸ்ரேலில் தற்போது சுக்கோத் பண்டிகையின் விடுமுறைகள் தொடங்கியுள்ளதால், இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போர் தொடங்கியது முதல், ஈரான் உள்ளிட்ட 5 நாடுகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

காஸாவுக்குள் நிவாரண உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், உணவு மற்றும் மருத்துவ வசதிகளுக்கு அங்கு பெரும் பஞ்சம் உருவாகியுள்ளது. இதனால், நாள்தோறும் ஏராளமான குழந்தைகள் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடினாலும் உயிரிழந்து வருகின்றனர்.

Advertisement

இத்துடன், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20 முக்கிய அம்சங்கள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

இதையடுத்து, இந்தப் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை பலத்த பாதுகாப்புடன் எகிப்தின் ஷர்ம் எல்- ஷெயிக் நகரத்தில், நேற்று (6) தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version