வணிகம்
பதற வைக்கும் தங்கத்தின் விலை: ரூ.11,000-ஐத் தாண்டிய ஒரு கிராம்- சவரன் ரூ.89,600-ஐ தொட்டு புதிய உச்சம்!
பதற வைக்கும் தங்கத்தின் விலை: ரூ.11,000-ஐத் தாண்டிய ஒரு கிராம்- சவரன் ரூ.89,600-ஐ தொட்டு புதிய உச்சம்!
சர்வதேசப் பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறியும், இறங்கியும் வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களைக் கவலையில் ஆழ்த்தி வருகிறது.இதனிடையே, நேற்று (அக். 6) ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இதன் விளைவாக, முதன்முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தைக் கடந்து விற்பனையானதுடன், ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்தைத் தொட்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.இன்றும் தொடரும் விலை உயர்வு!இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்றும் (அக். 7) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை நிலவரப்படி, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.600 உயர்ந்து, ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வு தங்கம் வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளி விலை நிலவரம்:தங்கத்தின் விலையில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டிருந்தாலும், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் இந்த வரலாறு காணாத தொடர் விலை ஏற்றம் காரணமாக, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த சாதாரண மக்கள் கடும் தயக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.