சினிமா

பிக்பாஸ் செட்டை இழுத்துமூட உத்தரவு!!..காரணம் இதுதானாம்.

Published

on

பிக்பாஸ் செட்டை இழுத்துமூட உத்தரவு!!..காரணம் இதுதானாம்.

பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடந்து வருகிறது. தற்போது அக்டோபர் 5 ஆம் தேதி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ரசிகர்கள் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டும் வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த பிரபலங்கள் தொகுத்து வழங்கி வரும் நிலையில், கன்னடத்தில் தற்போது 12வது சீசன் நடந்து வருகிறது. பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில், பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.பெங்களூரூவின் புறநகரில் உள்ள பிடாடி ஹோப்ளியில் ஜாலி வுட் ஸ்டுடியோஸ் & அட்வென்ச்சர்ஸில் பிக்பாஸ் கன்னட செட் அமைந்துள்ளது.இந்த பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல், நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றாததால் செட்டை மூட கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி.இதனால் பிக்பாஸ் சீசன்12 இடையிலேயே நிறுத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version