டி.வி

பிக்பாஸ் செட்டை இழுத்து மூடுமாறு உத்தரவு.! விதி மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு

Published

on

பிக்பாஸ் செட்டை இழுத்து மூடுமாறு உத்தரவு.! விதி மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு

தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்  என கிட்டத்தட்ட ஐந்து  மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி  ஒளிபரப்பாகி வருகின்றது. தெலுங்கில்  ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன்லால்,  கன்னடத்தில் கிச்சா சுதீப்,  தமிழில் விஜய் சேதுபதியும் தொகுத்து வழங்கி வருகின்றனர். கன்னட பிக்பாஸ் சீசன் 12  நிகழ்ச்சி, 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல கிச்சா சுதீப் தொகுத்து வழங்கியுள்ளார்.  கடந்த வருடமே அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்தார். ஆனாலும்  பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் சேனல் நிர்வாகத்திற்கும் சுதீப்பிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை காரணமாக தனது பிடிவாதத்தை தளர்த்திய சுதீப், இந்த சீசனையும் தொகுத்து வழங்குவதாக ஒப்புக் கொண்டார். இந்த நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை மூட வேண்டும் என  அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.  இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறித்த பிக்பாஸ் இருக்கும் இடத்தில் கழிவுநீர் அகற்றுதல், நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனால் வளாகத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள்,  சரியான உள் வடிகால் இணைப்புகள் இல்லை, STP அலகுகள் செயல்படாமல், பயன்படுத்தப்படாமல் கிடப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது அதனை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பல விதிமுறை விதி மீறல்களை காரணம் காட்டி,  சுற்றுச்சூழல் விதிமுறைகளை தயாரிப்பு நிறுவனம் கடைபிடிக்கும் வரை  கன்னட பிக்பாஸ் தளத்தை நிறுத்தி வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது . 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version