டி.வி

பிரவீன் ராஜ் ஒரு அயோக்கியன்.? இளம் பெண் கொடுத்த பரபரப்பு புகார்.! வெடித்த பூகம்பம்

Published

on

பிரவீன் ராஜ் ஒரு அயோக்கியன்.? இளம் பெண் கொடுத்த பரபரப்பு புகார்.! வெடித்த பூகம்பம்

கடந்த 2017 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.  இதன் ஒன்பதாவது சீசன் அக்டோபர் ஐந்தாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை குடும்பங்களும்  இணைந்து பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக கொண்டாடினர். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள்  சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்த சீசன்  தகுதி இல்லாதவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள்  அனுமதித்துள்ளது. குறிப்பாக திவாகர், கலையரசன், பலூன் அக்கா எனப்படும்  அரோரா  ஆகியவர்கள் மீது ரசிகர்கள் தமது வெறுப்பை கொட்டி தீர்த்துள்ளனர். பிக்பாஸ் வாய்ப்புக்காக எத்தனையோ தகுதி உள்ளவர்கள்  ஏங்கித் தவிக்கும் நிலையில், சர்ச்சைகளின் மூலம்  பிரபலமானவர்களை பிக் பாஸ் தேர்வு செய்தது  பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில்,  சிந்து பைரவி,  சின்ன மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான பிரவீன் ராஜ் பற்றி இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது குறித்த பெண்ணுக்கு வயது குறைவாக இருக்கும்போது  பிரவீன் ராஜ் அவரை வலுக்கட்டாயமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று  வன்புணர்வு செய்ததாகவும்,  அவருடைய  நண்பிகளையும் தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் இது தொடர்பில் தன்னிடம் ஆதாரம் இல்லை. இவரால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது இருந்தால் என்னுடன் இணையுங்கள். நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறேன் என போஸ்ட் போட்டு உள்ளாராம். பிரவீன் ராஜ் போன்ற அயோக்கியர்கள்  பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.எனவே இது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் பிக் பாஸ் அவரை  வெளியே  துரத்தி அடிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதன் உண்மை தன்மையும் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version