சினிமா
விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா.. நொறுங்கிய காரின் வீடியோ இதோ
விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா.. நொறுங்கிய காரின் வீடியோ இதோ
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தானவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனாலும் இது தொடர்பில் அவர்கள் இருவரும் மௌனம் காத்து வருகின்றார்கள். இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.எனினும் இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பி உள்ளதாகவும், அவரது ஆடம்பரக்கார் விபத்தில் சேதம் அடைந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளன. குறித்த விபத்து ஆந்திரா பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத்துக்குத் திரும்பும் வழியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய மற்றொரு கார், நிற்காமல் அந்த இடத்தை விட்டு வேகமாக சென்று விட்டதாம். அதன்பின்பு விஜயின் கார் ஓட்டுநர் இது தொடர்பில் உள்ளூர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதே வேளை தற்போது இந்த கார் விபத்தில் அனைவரும் நலமுடன் இருப்பதாக விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .