வணிகம்
வீடு, வாகனம், தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்: இ.எம்.ஐ. குறையப் போகுது- செக் பண்ணுங்க
வீடு, வாகனம், தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்: இ.எம்.ஐ. குறையப் போகுது- செக் பண்ணுங்க
சென்னை: வீடு, வாகனம் அல்லது தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி! இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎஃப்சி வங்கி, தனது எம்.சி.எல்.ஆர். (Marginal Cost of Funds-based Lending Rate) எனப்படும் கடன் வட்டி விகிதங்களைச் சில தவணைக் காலங்களுக்கு 15 அடிப்படைப் புள்ளிகள் (bps) வரை குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் இதனால் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த மாற்றம் அக்டோபர் 7, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.எவ்வளவு குறைகிறது? வங்கிகள் வழங்கும் கடன்களில் பெரும்பாலானவை, எம்.சி.எல்.ஆர். எனப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதத்துடன்தான் இணைக்கப்பட்டிருக்கும். இந்த எம்.சி.எல்.ஆர். குறையும்போது, அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களின் வட்டி விகிதமும் தானாகவே குறையும். இதனால், வாடிக்கையாளர்களின் இ.எம்.ஐ தொகையும் குறையத் தொடங்கும்.திருத்தப்பட்ட புதிய எம்.சி.எல்.ஆர். விகிதங்கள்:தற்போது எச்.டி.எஃப்.சி. வங்கியின் எம்.சி.எல்.ஆர். (MCLR) விகிதங்கள் 8.40% முதல் 8.65% வரை உள்ளன. முன்னதாக இது 8.55% முதல் 8.75% வரை இருந்தது. இந்த மாற்றத்தின்படி, பல தவணைகளுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன:குறிப்பாக, மூன்று மாதக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 15 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.எம்.சி.எல்.ஆர். என்றால் என்ன?எம்.சி.எல்.ஆர். (Marginal Cost of Funds-based Lending Rate) என்பது, ஒரு நிதி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட கடனுக்கு விதிக்க வேண்டிய குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆகும். ரிசர்வ் வங்கி (RBI) கடந்த 2016-ல் அறிமுகப்படுத்திய இந்த முறை, கடன் வட்டி விகிதங்கள் எந்த அளவிற்குப் பயணிக்கலாம் என்ற கீழ் எல்லையை நிர்ணயிக்கிறது.பெரும்பாலான வீட்டுக் கடன்கள் மற்றும் சில தனிநபர் கடன்கள், எம்.சி.எல்.ஆர். உடன் இணைக்கப்பட்டிருக்கும். உங்கள் கடன் வட்டி விகிதம் எம்.சி.எல்.ஆர். உடன் இணைக்கப்பட்டிருந்தால், வங்கியின் எம்.சி.எல்.ஆர். குறையும்போது உங்கள் கடன் மீதான வட்டி விகிதமும் குறைந்து, இ.எம்.ஐ. தொகை சற்றுச் சுமையின்றி மாறும்!கவனம்: தற்போது HDFC வங்கியின் வீட்டுக் கடன்கள் ரெப்போ ரேட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால், எம்.சி.எல்.ஆர். குறைப்பு பெரும்பாலும் ரெப்போ ரேட்டுடன் இணைக்கப்படாத கடன்களைப் பெற்றவர்களுக்கு அல்லது எம்.சி.எல்.ஆர். கீழ் உள்ள கடன்களுக்கு மட்டுமே நேரடியாகப் பலன் அளிக்கும். மற்றவர்கள் தங்கள் கடன் ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம்.(அதிகாரபூர்வமான மற்றும் துல்லியமான தகவல்களுக்கு HDFC வங்கி வலைத்தளத்தைப் பார்க்கவும்)