விளையாட்டு

50 புள்ளிகளை அள்ளிய தமிழ் தலைவாஸ்… ஆனாலும் போராடும் பாட்னா பைரேட்ஸ்!

Published

on

50 புள்ளிகளை அள்ளிய தமிழ் தலைவாஸ்… ஆனாலும் போராடும் பாட்னா பைரேட்ஸ்!

12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் புரோ கபடி லீக் தொடரின் 69-வது லீக் ஆட்டம் தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சிறப்பாக தொடங்கின. ஆனால், முதல் 10 நிமிடத்தில் 13 -11 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் முன்னிலை பெற்றது. இருப்பினும், கேப்டன் அர்ஜுன் தேஷ்வாலின் அதிரடியான ரைடு தமிழ் தலைவாஸுக்கு கை கொடுத்தது. அதேநேரத்தில், அணியின் டிஃபென்ஸ் வலுவாக இருக்க அடுத்த 10 நிமிடத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 2 முறை ஆல்-அவுட் எடுத்தது. அந்த 10 நிமிடங்களில் 19-6 என புள்ளிகளை அள்ளிய தமிழ் தலைவாஸ் முதல் பாதி முடிவில் 30 – 19 என அதிரடியாக முன்னிலை பெற்றது. அதே அதிரடியான ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அடுத்த 10 நிமிடங்களுக்கு தொடர்ந்த நிலையில், 37-24 என 13 புள்ளிகள் வித்தியாசத்தில் அணி சிறப்பாக முன்னேறியது. மேலும் ஆட்டத்தில் மீதம் 7 நிமிடங்கள் இருக்க தமிழ் தலைவாஸ் அணி 3-வது ஆல்-அவுட்டை நிகழ்த்தியது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version