சினிமா

ஆமா நான் ஆம்பள தான் – கெமிக்கு பெருகும் ஆதரவு.! திவாகரிடம் மன்னிப்பு கேட்ட ஹவுஸ்மேட்ஸ்

Published

on

ஆமா நான் ஆம்பள தான் – கெமிக்கு பெருகும் ஆதரவு.! திவாகரிடம் மன்னிப்பு கேட்ட ஹவுஸ்மேட்ஸ்

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் ஐந்தாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது . இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் .இந்த நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் தங்களுடைய வாழ்க்கையில் நடந்தது பற்றி பேசும்படி பிக்பாஸ் தரப்பில் கூறப்பட்டது.  அதற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய கதையைச் சொன்னார்கள். அதில் கெமி தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார்.  அவருடைய கதை பலரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. அதன்படி அவர் கூறுகையில் , அன்பாக பார்க்க வேண்டிய கண்கள் எல்லாம் என்னை தப்பா பார்த்து இருக்கு.. நிறைய பார்ட் டைம் மாடலிங் பண்ணினேன்.. ஆங்கர் ஆகணும், ஆக்டர் ஆகணும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன்..  இவ ஆம்பள மூஞ்சி… இவ ஆம்பளையா? பொம்பளையான்னு? தெரியல.. எல்லோரும் என்னை ஆம்பள மாதிரி இருக்கேன்னு சொன்னாங்க..  தன்னையும் தன் குடும்பத்தையும் மொத்தமாக பார்த்துக்கிட்டு காப்பாற்றுவது ஆம்பளத்தனம்னா நான் ஆம்பள தான்.. என்றார். இவ்வாறு கெமி கூறியதை கேட்ட சக போட்டியாளர்களும் கைதட்டி தங்களுடைய அன்பை தெரிவித்தனர்.  மேலும் கெமியின்  இந்த கருத்து இணையத்தில் வேகமாக பரவி பலரும் கெமிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதேபோல திவாகர் தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசும் போதும் அவருடன் சண்டை போட்ட போட்டியாளர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு,  நீங்க நல்ல மருத்துவர் என்பதை ஒப்புக் கொள்கின்றோம்.  ஆனால் நடிகர் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று கலாய்த்து உள்ளார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version