தொழில்நுட்பம்
இனி விபத்து பயமே இல்ல… 323 கி.மீ. ரேஞ்ச்; இந்தியாவின் முதல் ‘ரேடார்’ இ-பைக் அறிமுகம்!
இனி விபத்து பயமே இல்ல… 323 கி.மீ. ரேஞ்ச்; இந்தியாவின் முதல் ‘ரேடார்’ இ-பைக் அறிமுகம்!
இந்திய இருசக்கர வாகன சந்தையில் இதுவரை இல்லாத நவீன பாதுகாப்பு அம்சத்துடன், நாட்டின் முதல் ரேடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார பைக்காக அல்ட்ராவயலட் X-47 கிராஸ்ஓவர் (Ultraviolette X-47 Crossover) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான அல்ட்ராவயலட் (Ultraviolette), இந்த பைக்கின் மூலம் மின்சார இருசக்கர வாகனங்களில் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பான (ADAS – Advanced Driver Assistance System) ரேடார் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.ரேடார் தொழில்நுட்பம்: UV Hypersense என்றால் என்ன?இந்த பைக்கின் மிக முக்கியமான அம்சம், இதில் உள்ள “UV Hypersense” என அழைக்கப்படும் ரேடார் (Radar) தொழில்நுட்பம் தான். இந்த அமைப்பு பின்னால் வரும் வாகனங்களைக் கண்காணித்து ஓட்டுநருக்கு விபத்து எச்சரிக்கைகளை வழங்குகிறது. பைக்கின் பின்புறத்தில் பொருத்தப்பட்டு உள்ள இந்த 77GHz ரேடார், சுமார் 200 மீட்டர் தூரம் வரை உள்ள வாகனங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது.பாதுகாப்பு அம்சங்கள்: பின்புற மோதல் எச்சரிக்கை (Rear Collision Warning): பின்புறத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்களால் மோதல் ஏற்பட வாய்ப்பிருந்தால், அது ஓட்டுநருக்கு எச்சரிக்கை அளிப்பதோடு தானாகவே அபாய விளக்குகளை (Hazard Lights) ஒளிர செய்யும். கண்ணுக்கு தெரியாத ‘பிளைண்ட் ஸ்பாட்’ பகுதிகளிலுள்ள வாகனங்களைப் பற்றி மிரர்கள் மற்றும் டிஸ்ப்ளேவில் எச்சரிக்கை ஒளி மூலம் தெரிவிக்கும். லேன் மாற்றம் எச்சரிக்கை பாதுகாப்பாக லேன் மாற்றுவதற்கு உதவுகிறது. அல்ட்ராவயலட் F77 மாடலின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள X-47, மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது.விலை மற்றும் வேரியண்ட்கள்:அல்ட்ராவயலட் X-47 கிராஸ்ஓவர் மொத்தம் 4 முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் அடிப்படை மாடலான X-47 Original-ன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முதலில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு) அதிக ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட X-47 Recon+ மாடலின் விலை ரூ.3.99 லட்சம் வரை செல்கிறது. ரூ.999 செலுத்தி இந்த பைக்கின் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்த X-47 மாடல், நகர்ப்புற பயன்பாட்டிற்கும் நெடுந்தூரப் பயணங்களுக்கும் ஏற்ற ‘கிராஸ்ஓவர்’ வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரேடார் மற்றும் கனெக்டெட் டெக்னாலஜிகள், மின்சார இருசக்கர வாகனப் பிரிவில் பாதுகாப்பை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்று உள்ளன.