சினிமா

இன்னைக்கு அவங்கள டார்கெட் பண்ணு;சுபியின் முகத்திரை கிழிந்தது! Housemates_ன் பிளான்

Published

on

இன்னைக்கு அவங்கள டார்கெட் பண்ணு;சுபியின் முகத்திரை கிழிந்தது! Housemates_ன் பிளான்

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9 வது சீசன் ஆரம்பித்தபோது,  இந்த சீசனில் அதிகமான சோசியல் மீடியா பிரபலங்கள் பங்கேற்றனர்.   பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால்  ஜாலியாக இருக்கும் என்று நினைத்த ரசிகர்களுக்கு தற்போது போது மன அழுத்தம் தான் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான சீசன்களில் போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை காட்டி தான் மக்களை மகிழ வைத்தார்கள்.  ஆனால் இந்த சீசனில்  முழுக்க முழுக்க எல்லோருடைய கவனமும் சண்டைகளில் தான் இருக்கின்றது.  அதிலும் குறட்டை போட்டதற்கெல்லாம் சண்டை போடுகின்றார்கள். திவாகர் என்ன சொன்னாலும் அங்குள்ள ஹவுஸ்மேட்ஸ் ஏட்டிக்கு  போட்டியாக பேசிக் கொண்டே இருக்கின்றார்கள்.  இதனால் சண்டை  சச்சரவு நிறைந்த வீடாக பிக் பாஸ் மாறி உள்ளது.  இன்று வெளியான ப்ரோமோவிலும்  பார்வதி  தனது வேலையை ரிசைன் பண்ணுவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், முதல் நாள்  ராத்திரி  ரம்யாவும் சுபிக்ஷாவும்  பேசிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் சுபிக்ஷா  இன்னைக்கு நாங்க பார்வதிய  டார்கெட் பண்ணினோம், நாளைக்கு  திவாகரை டார்கெட் பண்ணுவோம்.. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவராக டார்கெட் பண்ணுவோம் என்று ரம்யாவுடன் பேசிக்கொண்டு உள்ளார்.இதனாலையே அடுத்த நாள் ரம்யா, திவாகர் உடன் சண்டை போட்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.  அதுபோல சுபிக்ஷாவும் பார்வதியுடன் சண்டை போட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. இன்னொரு பக்கம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் திருட்டுத்தனமாக பிளான் ஒன்றை போடுகிறார்கள். அதில் விஜே பார்வதி, சூப்பர் டீலக்ஸ் வீட்டில் உள்ளவர்கள் என்ன கேட்டாலும் நாங்க பண்ணி கொடுக்கணும். ஆனா நாங்க அவங்களுக்கு தெரியாம ஏதும் டீஸ் செஞ்சு மறைச்சு வச்சு நாம மட்டும் வந்து சாப்பிட்டுக்கலாம் என்று சொல்லுகின்றார். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. சூப்பர் டீலக்ஸ்  வீட்டில்   உள்ளவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால்  பிக்பாஸ் வீடு  ரணகளம் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version