இந்தியா

புதுவையில் 100 நாட்கள் காலியாக இருக்கும் வேளாண் இயக்குநர் பதவி: உடனே நிரப்ப வலியுறுத்தி – முன்னாள் அமைச்சர் ஆளுநரிடம் மனு

Published

on

புதுவையில் 100 நாட்கள் காலியாக இருக்கும் வேளாண் இயக்குநர் பதவி: உடனே நிரப்ப வலியுறுத்தி – முன்னாள் அமைச்சர் ஆளுநரிடம் மனு

முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரியில் 100 நாட்களாகக் காலியாக இருக்கும் வேளாண் இயக்குநர் பதவியை உடனே நிரப்பக் கோரிக்கை விடுத்து துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் வேளாண்துறையில் இயக்குநர் பொறுப்பில் இருந்து  வசந்தகுமார் ஓய்வு பெற்ற நாளில் இருந்து கிட்டத்தட்ட 100 நாட்களைக் கடந்தும் வேளாண் துறைக்கு என்று முறையான இயக்குநர் நியமிக்கப்படாமல் இருக்கிறது.வேளாண்துறை மொத்த செயல்பாடுகளும் பல்வேறு நிலைகளில் இருக்கிறது. அதிகாரிகளை மேற்பார்வையிடுவது, புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடத்தில் தெரியப்படுத்துவது, விவசாயிகளுக்கு தேவையான உரத் தேவையை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி அதனை பெறுவது, காலி பணியிடங்களை நிரப்புவது, விவசாயிகளுக்கான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது, விவசாயத்துறை சார்ந்த இணை நிறுவனங்கள் பஜன் கோ, கே.வி.கேகாரைக்கால், கே.வி.கே பாண்டிச்சேரி, போன்ற வேளாண் நிறுவனங்களுடைய செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது, அதற்கான நிதி ஒப்புதல் தருவது இது போன்ற எண்ணற்ற வேலைகள் இருக்கிறது.எதிர்வரும் மழை காலங்களில் திட்டமிடுவது புயல் மற்றும் பெருமழை காலங்களை எதிர்கொள்வது குறித்து திட்டமிடுவது,  உற்பத்தியாகும் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவது, தோட்டக்கலைத் துறையில் உள்ளபல்வேறு தொழில்நுட்பகளை நடைமுறைப்படுத்துவது, தோட்டக்கலைத் துறையில் மூலம் உற்பத்தியாகும் பொருட்களைசந்தைப்படுத்துவது, மார்க்கெட்டிங் கமிட்டி போன்ற நிறுவனங்களை மேற்பார்வையிடுவது, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு விதை பண்ணைகளை மேற்பார்வயிடுவது மற்றும் அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது போன்ற பல்வேறு பணிகள் உள்ளன. இந்தத் துறையில் 100 நாட்களுக்கு மேல் இயக்குநர் இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை என்று நான் நினைக்கிறேன்.இயக்குநர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என பொதுமக்கள் மத்தியிலே பேசப்படுவது தகுதி வாய்ந்த அதிகாரிகள் இணை இயக்குநர் பதவியிலே இருந்தும் கூட அதுபோன்ற தகுதியானவர்களை நியமிக்காமல் வெளியில் இருந்து பி.சி.எஸ் ஆபீஸர் போன்றவர்களை நியமிப்பதற்கான முயற்சி ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகிறது.இதில் ஏதோ தனிப்பட்ட நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. துணைநிலை ஆளுநர் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று கருதுகிறோம். ஆகையால், வேளாண் துறைக்கு தொழில்நுட்பக் கல்வி பயின்ற தகுதி வாய்ந்த அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு நன்கு தெரியும், மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்திற்கான நிதி ஆர்.கே.வி.ஒய் மார்க்கெட்டிங் போர்டல் ஸ்மார்ட் கார்டு போன்ற திட்டங்களை எல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் குறித்த நேரத்தில் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறதா? மத்திய அரசினுடைய பல்வேறு கோப்புகளுக்கு உரிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா?கரும்பு உற்பத்தியை கண்காணிப்பது மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை மேற்பார்வையிடுவது  போன்றவற்றை துறையின் இயக்குநர் மட்டுமே மேற்கொள்ள முடியும். வேளாண் துறையின் முதன்மை அலுவலர் பதவி கடந்த 80நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளது. தகுதியுள்ள மூத்த அதிகாரி இருக்கும் நிலையில் இயக்குநர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. இது விவசாயிகள் நலத்தில் அக்கறை கொள்ளாத போக்கில் இந்த அரசாங்கம் இருப்பதை உணர்த்துகிறது.வேளாண் இயக்குநர் பதவி இப்படி நிரப்பப்படாமல் உள்ளதால் துறையில் உள்ள பல்வேறு பதவிகள் பணி நியமனங்கள்நடைபெறவில்லை. மேலும், விதிகளின்படி பதவி உயர்வு செய்ய முடியாமல் பல நிலைகளில் பதவிகள் காலியாக உள்ளது. மேலும், வேளாந்துறையின் மிக முக்கியமான செயல் பதவியான வேளாண் அலுவலர் பதவி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேளாண் இயக்குநர் பதவி நிரப்பப்படாமல் உள்ளதால் தான்.வேளாண் அமைச்சரின் தனிச்செயலரின் வாய் வழி உத்தரவின் பேரிலேயே சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் வேளாண் துறையில் நடைபெறுகிறது.வேளாண் துறையில் இயக்குனர் நிரப்பப்படாமல் உள்ளதால் கரும்பு ஆணையர் (cane commissioner)மற்றும் உர கண்கப்பாளர் (Fertilizer Comptroller) பொறுப்புகளை சட்டபூர்வமான நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ளது. வேளாண் இயக்குநர் பதவி காலியாக உள்ளதால் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கோப்புகள் மற்றும் முன் மொழிவுகள் நேரடியாக வேளாண் செயலருக்கு சமர்ப்பிக்க கீழ்நிலை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு செய்யப்பட்டுள்ளதால் கோப்புகள் ஆய்வு செய்யப்படாமலேயே சமர்ப்பிக்கப்படும் நிலை உள்ளது.அரசின் ஒப்புதல் பெற்ற வழிகாட்டு நெறிமுறைகள் படி பயனாளிகளின் பட்டியல் வேளாண் இயக்குநரின் ஒப்புதல் பெற்ற பிறகே அரசுக்கு சமர்ப்பித்து ஆணை பெற வேண்டும். ஆனால், வேளாண் இயக்குநர் பதவி நிரப்பப்படாமல் உள்ளதால் சட்டத்திற்கு புறம்பாக வேளாண் இயக்குனரின் ஒப்புதல் பெறாமலேயே அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்படுவது தவறான முன்னுதாரணமாகவும் சட்டத்திற்கு புறம்பானதாகவும் உள்ளது.வேளாண் அமைச்சரின் தனிச்செயலாளர் பணி மாறுதலுக்கு கையூட்டு பெற்று செயல்படுவதால் வேளாண் துறையின்நல்லொழுக்கம் கெட்டுப் போய் உள்ளது. புதிதாக பணியில் சேர்ந்த வேளாண் செயலர் புதுச்சேரியை பற்றிய போதிய அனுபவம் இல்லாததால் வேளாண் அமைச்சரின் தனிச்செயலர் கூறும் எல்லா செயல்களுக்கும் தலையாட்டும் நிலைமை உள்ளது.மேலும், வேளாண் துறையை கவனிக்கும் இணைச் செயலரை வைத்துக்கொண்டு சட்டத்துக்கு புறம்பான கோப்புகளை தயாரித்து வேளாண் செயல்களிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுவதால் வேளாண் துறையில் சுமுகமான சூழ்நிலை இல்லாமல் உள்ளது. வேளாண் துறையின் தோட்டக்கலை பிரிவில் செயல்படும் என் வீடு என் நிலம் என்ற திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும். இடுபொருட்கள் மிகவும் தரம் தாழ்ந்து உள்ளது இந்தத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.வேளாண் துறையில் தலைமை பொறுப்பில் யாரும் இல்லாததால் அனைத்து வேளாண் திட்டங்களும் சரியாக செயல்படுத்தப்படுவதா என்று கண்காணிக்க நிலைமை இல்லை. இதனால் விவசாயிகளுக்கு சேர வேண்டிய மானியம் சரியாக நேரத்தில் போய் சேர்வதில்லை குறிப்பாக மத்திய அரசு திட்டத்தில் இந்த நிதியாண்டின் 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில் ஒரு சில திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் ஒப்புதல் மற்றும் வரவேண்டிய நிதி மத்திய அரசிடம் ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் வரவில்லை.மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு நிதி பெறுவதற்காக தேவையான பயன்பாட்டு சான்றிதழ் (Utilisation Certificate) அளிக்க முடியாத நிலையில் விவசாயத்துறை தத்தளிக்கிறது. இதனால் மத்திய அரசின் நிதி உதவி பெறுவது தாமதம் ஆவதால் திட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.இயக்குநர் பொறுப்பில் அதிகாரி இல்லாததால் புதுச்சேரி அரசின் விவசாயத்துறை சார்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்படவேண்டிய மானியக் கொடை (Grant in Aid) அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது இதனால் அந்த நிறுவனங்களில் பணிபுரியும்ஊழியர்களின் சம்பளம் மாத சம்பளம் கேள்விக்குறியாக இருக்கிறது.விவசாய துறை இயக்குநர் பதவி நிரப்பப் படாததால் பல இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். அரசின் மெத்தன போக்கை கண்டித்து விவசாயிகளை ஒன்று திரட்டி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.இதுகுறித்து விவசாயிகள் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க நிற்பந்தித்து வருகிறார்கள் இது குறித்து விரைவில் முடிவுஎடுக்க உள்ளோம். இந்த விஷயத்தில் மேதகு புதுச்சேரி ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மேலும் விவசாயிகளின் நலன் கருதியும் விவசாயிகளின் எதிர்காலம் கருதியும் உடனடியாக வேளாண் துறையில் பணியாற்றக்கூடிய மூத்த தொழில்நுட்ப கல்வி பயின்ற தகுதியான அதிகாரிக்கு அந்தப் பொறுப்பை கொடுத்து புதுச்சேரி வேளாண்துறை சிறப்பாக செயல்படுவதற்கு துணைநிலை ஆளுநர் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version