டி.வி

மூன்றாம் பிறை கமல் போல மாறிய திவாகர்.. வாட்டர் மெலன் ஸ்டாருக்கு அதிகரிக்கும் சப்போர்ட்

Published

on

மூன்றாம் பிறை கமல் போல மாறிய திவாகர்.. வாட்டர் மெலன் ஸ்டாருக்கு அதிகரிக்கும் சப்போர்ட்

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே விஜய் டிவிக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.  இதில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தொடர்பில் பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வாட்டர் மெலன் ஸ்டார்  என தனக்குத்தானே பட்டம் சூடிக்கொண்ட திவாகர் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். தற்போது இவரின்  செயல்பாடுகள்,  வீடியோக்கள் தான்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இவர் நெகட்டிவ் விமர்சனங்கள் மூலமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள சக போட்டியாளர்கள் அவரை ஒதுக்கும் விதமாக நடந்து வருகின்றனர்.எனினும் வாட்டர் மெலன் ஸ்டார் என்ற பெயரில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற திவாகருக்கு, தன் மீதான எதிர்மறை விமர்சனங்களை மாற்றிக்கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.  இதனை அவர் சரி செய்து கொள்வாரா? இல்லை தன் மீதான நெகட்டிவ் விமர்சனங்களை மேலும் அதிகரித்துக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில்  மூன்றாம் பிறை கமல் போல் நடித்து  காண்பித்துள்ளார் டாக்டர் திவாகர். ஏற்கனவே பாத்ரூமில் குளிக்கும் போது விஜய் சேதுபதி நடித்த பவானி கேரக்டரில் நடித்தார் .  மேலும் இவர் பிக்பாஸ் நீச்சல் தடாகத்தில்  அரைகுறை ஆடையுடன்  குளித்த வீடியோவும் வைரலாகி வருகின்றது. அதில் பலூன் அக்கா என்ற அரோகா   ஆடிய நடனமும்  விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version