வணிகம்
ரேஷனில் இந்த அட்டைக்கு அதிக சலுகை; உங்க கார்டு வகையை இப்படி மாற்றுங்க!
ரேஷனில் இந்த அட்டைக்கு அதிக சலுகை; உங்க கார்டு வகையை இப்படி மாற்றுங்க!
தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்தாலும், அரசின் சலுகைகள் வரும்போது, எந்த அட்டைதாரருக்குக் கிடைக்கும் என்ற குழப்பமே நீடிக்கிறது. மகளிர் உரிமைத் தொகை முதல் பேரிடர் நிவாரணம் வரை சலுகைகள் மறுக்கப்பட அடிப்படைக் காரணம், சாதாரண மக்கள் அறியாதிருக்கும் குடும்ப அட்டையின் வகைப்பாடுதான்!5 வகையான குடும்ப அட்டைகள்; நீங்கள் எந்த வகை?ரேஷன் அட்டை என்றாலே அனைவருக்கும் தெரிவது அரிசி பெறுவது மட்டும்தான். ஆனால், தமிழக அரசு குடும்ப அட்டைகளை ஐந்து முக்கிய வகைகளாகப் பிரித்துள்ளது. இந்த வகைப்பாட்டை அறிந்துகொண்டால் மட்டுமே, உங்கள் தேவைக்கேற்ப அட்டையை மாற்றியமைக்க முடியும்.சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாற வழி என்ன?புதிதாக ரேஷன் அட்டை வாங்கும் பலருக்கு தொடக்கத்தில் வழங்கப்படுவது சர்க்கரை அட்டை (NPHH-S) தான். சில காலம் நீங்கள் அரிசியை வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா என்பதை அரசாங்கம் கண்காணிக்கும். அதன் பிறகே நீங்கள் அரிசி அட்டையாக (PHH/NPHH) மாறத் தகுதி பெறுவீர்கள்.ஆனால், அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் விரும்பினால் அதை சர்க்கரை அட்டையாகவோ அல்லது அதைவிடக் குறைவான சலுகை உள்ள அட்டையாகவோ மாற்றிக்கொள்ளலாம். ஆனால், கீழே இருக்கும் நிலையில் இருந்து மேலே இருக்கும் அட்டைக்கு (உதாரணமாக, சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு) மாற பல கட்டுப்பாடுகளும், நடைமுறைகளும் உள்ளன.உங்களுக்கு மேலே உள்ள வகைகளில் இருந்து கீழே உள்ள வகைக்கு (PHH-இல் இருந்து NPHH-S-க்கு) மாற விரும்பினால், அது மிகவும் சுலபம். நீங்கள் (TN PDS) இணையதளம் (tnpds.gov.in) அல்லது அதன் மொபைல் செயலி மூலம் எளிதில் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளலாம்.கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டத்திற்கு: NPHH-S (சர்க்கரை அட்டை) அல்லது NPHH (முன்னுரிமை இல்லாத அட்டை)-இல் இருந்து PHH (முன்னுரிமை அட்டை)-க்கு மாற விரும்பினால், ஆன்லைன் வழிமுறை மட்டும் போதாது. நீங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்பதையும், அரசின் சலுகைகளைப் பெறத் தகுதியானவர் என்பதையும் அதிகாரிகளுக்கு நிரூபிக்க வேண்டும்.அரிசி அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி? உண்மையிலேயே ஏழ்மையில் இருப்பவர்கள் அல்லது பொருளாதாரச் சூழல் மாறியதால் தகுதியானவர்கள், முறையாக விண்ணப்பித்தால் அட்டை வகையை மாற்றிக்கொள்ள முடியும்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு திங்கள்கிழமை (மண்டே பெட்டிஷன்) மனு கொடுக்க வேண்டும்.இணைக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள்!உங்கள் ஆதார் அட்டை, புகைப்படங்கள். நீங்கள் வறுமைக் கோட்டுப் பட்டியலில் உள்ளவர் என்பதற்கான ஆதாரம் (தேவைப்பட்டால் கிராம ஊராட்சியில் உள்ள வறுமை ஒழிப்பு சங்கப் பட்டியல்). உங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) இருந்து, உங்களுக்கு அதிக சொத்துகள் இல்லை அல்லது நீங்கள் உண்மையிலேயே ஏழ்மையில் உள்ளீர்கள் என்று விசாரித்து வழங்கப்படும் அறிக்கை.*விசாரணை மற்றும் உண்மைத் தன்மை அறிதல்ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உங்கள் மனு உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலருக்கு (DSO) அனுப்பப்படும். அவர்கள் கள ஆய்வு அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இத்துடன் உங்கள் ஆதார் எண் மூலம் மத்திய அரசின் தரவுகளைச் சரிபார்த்து, உங்கள் உண்மையான சொத்து மதிப்பு, வருமானம், வரி விவரங்கள், நீங்கள் வாங்கிய கடன்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்வார்கள்.எச்சரிக்கை! ஆதார் தரவுகள் பொய் சொல்லாது!அதிகாரிகளிடம் சிபாரிசு செய்வது, நன்கொடை கொடுப்பது போன்ற முயற்சிகள் இனி பலிக்காது. காரணம், ஆதார் எண் மூலம் உங்கள் உண்மையான நிதி நிலைமை வெளிவந்துவிடும். உண்மைத் தன்மை இருந்தால் மட்டுமே உங்கள் அட்டை வகை மாற்றம் உறுதி. இல்லையெனில், உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!உரிமை மறுக்கப்பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் (RTI) பயன்படுத்தி, அதிகாரிகள் வழங்கிய வகை மாற்றப்பட்ட அட்டைகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யலாம். தகுதியுள்ளோர் போராடலாம்! அரசின் தொழில்நுட்ப வளர்ச்சியால், அதிக சொத்து வைத்திருப்பவர்களின் அட்டைகள் தானாகவே கீழ்நிலைக்கு மாற்றப்படும் அபாயம் உள்ளது.