இந்தியா
இலக்கியத்திற்கான நோபல் பரிசு: ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிப்பு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு: ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிப்பு
உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அமைதிக்கான பரிசு நார்வே நாட்டின் ஓஸ்லோவிலும், மற்ற பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமிலும் ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகின்றன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை அவர்களின் இந்த வெற்றி, ‘அவரது கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த படைப்புகளுக்காக’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘அப்போகாலிப்டிக் பேரழிவின் நடுவிலும், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’ அவரது எழுத்துக்கள் உள்ளன என்று விருதுக் குழுவால் குறிப்பிடப்பட்டுள்ளது.This year’s #NobelPrize laureate in literature László Krasznahorkai is a great epic writer in the Central European tradition that extends through Kafka to Thomas Bernhard, and is characterised by absurdism and grotesque excess. pic.twitter.com/7YraQAfhsGவிருது அறிவிக்கப்படுவதற்கு முன், பட்டியலில் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை 6/1 என்ற விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஜெரால்ட் முர்னேன் 5/1 என்ற விகிதத்துடன் பட்டியலில் முன்னணியில் இருந்தார். மெக்சிகோவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரிவேரா கார்சா, ஜப்பானின் ஹருகி முரகாமி, ருமேனியாவின் மிர்சியா கார்டரேஸ்கு, அமெரிக்காவின் தாமஸ் பிஞ்சன் மற்றும் சீனாவின் கேன் ஸ்யூ உள்ளிட்டோர் இதரப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இருப்பினும், பந்தயக்காரர்களின் கணிப்புகள் பெரும்பாலும் நோபல் அகாடமியின் முடிவுகளுடன் பொருந்துவதில்லை.சல்லி புருதோம் (Sully Prudhomme) என்ற பிரெஞ்சு கவிஞரே 1901 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர். செல்மா லாகர்லோஃப் (Selma Lagerlöf) என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் 1909 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணி ஆவார். நோபல் பரிசு வரலாற்றில் பிரான்ஸ் நாடு அதிகபட்சமாக 16 வெற்றியாளர்களைக் கொண்டுள்ளது.124 ஆண்டுகால நோபல் பரிசு வரலாற்றில், இதுவரை 18 பெண்கள் மட்டுமே இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். லியோ டால்ஸ்டாய், வர்ஜீனியா வூல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்ற சில சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒருபோதும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. மேலும், ஜீன்-பால் சார்த்தர் மற்றும் போரிஸ் பாஸ்டர்னாக் போன்ற சிலர் இந்த விருதைத் தங்கள் விருப்பத்தின் பேரில் நிராகரித்தனர் அல்லது நிராகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை அவர்களின் இந்த கௌரவம், ஹங்கேரிய இலக்கியத்துக்கும், உலக இலக்கிய உலகிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாகும்.