டி.வி

தலைகீழான பிக்பாஸ் வோட்டிங் லிஸ்ட்.. ஆதிரையை முந்தியது யார் தெரியுமா?

Published

on

தலைகீழான பிக்பாஸ் வோட்டிங் லிஸ்ட்.. ஆதிரையை முந்தியது யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பித்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆகின்றன. இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாள் இருந்தே மோதல்களுக்கு பஞ்சமில்லை என்று கூறலாம். இந்த சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குனர் பிரவீன் காந்த், சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்‌ஷா,   துஷார் , கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.இந்த நிலையில், இந்த வாரம் வோட்டிங் முடிவு வெளியாகி உள்ளது. அதில் திவாகர் முதல் இடத்தில் காணப்படுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பிக்பாஸ் முதல் வார நாமினேஷனில் வியானா, ஆதிரை, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி, திவாகர் மற்றும் கலையரசன் ஆகியோர் இடம்பெற்றனர்.அதில் ஆதிரை அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார்.  ஆனால் தற்போது அவரை பின்னுக்கு தள்ளி மக்களின் மனங்களை திவாகர் வென்றுள்ளார். எனவே திவாகர் தனக்கான முத்திரையை பதித்துள்ளார் என்பது இதில் புலனாகிறது. மேலும் குறைவான வாக்குகளை பிரவீன் காந்தி பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வார இறுதியில் இது மாறலாம். அதில் யார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version