வணிகம்

தாமதமாக ஐ.டி.ஆர் தாக்கல்: உங்களுக்கு வர வேண்டிய ரீஃபண்டு தொகைக்கு வட்டி கிடைக்குமா?

Published

on

தாமதமாக ஐ.டி.ஆர் தாக்கல்: உங்களுக்கு வர வேண்டிய ரீஃபண்டு தொகைக்கு வட்டி கிடைக்குமா?

வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பல வரி செலுத்துவோர் கடைசித் தேதியைக் கோட்டைவிட்டிருப்பார்கள். இருப்பினும், தணிக்கை தேவைப்படாத வரி செலுத்துவோர், ரூ. 5,000 அபராதத்துடன் டிசம்பர் 31 வரை தாமதமாகக் கணக்கைத் தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. இப்போது பலருக்கும் எழும் ஒரு முக்கியக் கேள்வி இதுதான்: “நீங்கள் தாமதமாக ஐ.டி.ஆர் தாக்கல் செய்தால், அரசாங்கம் உங்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய (Refund) தொகைக்கு வட்டி கிடைக்குமா?”இதோ அதற்கான பதில்… ஆம்! வட்டியும் உங்களுக்குக் கிடைக்கும்!நீங்கள் தாமதமாகக் கணக்குத் தாக்கல் செய்தாலும், வருமான வரித் துறை உங்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய தொகைக்கு (Tax Refund) வட்டியுடன் சேர்த்தே பணம் கிடைக்கும். ஆனால், வட்டி கணக்கீடு செய்யப்படும் விதத்தில் ஒரு சிறிய மாற்றம் உள்ளது.தாமதமாகத் தாக்கல் செய்தால் வட்டி கணக்கீடு எப்படி?வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசித் தேதிக்குள் (செப்டம்பர் 16) நீங்கள் தாக்கல் செய்திருந்தால்:ஆனால், நீங்கள் தாமதமாக (Belated ITR) கணக்குத் தாக்கல் செய்தால்:அதாவது, உரிய தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறியதால், ஏப்ரல் 1 முதல் நீங்கள் தாக்கல் செய்த நாள் வரையிலான காலத்திற்குரிய வட்டியை நீங்கள் இழக்க நேரிடும். இருப்பினும், நீங்கள் பணம் தாக்கல் செய்த பிறகும், வருமான வரித் துறை தாமதமாகச் செலுத்தினால், அதற்கான வட்டி உறுதி.ரீஃபண்ட் தொகைக்கான வட்டி எவ்வளவு? (பிரிவு 244A)வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 244A-இன் படி, ரீஃபண்ட் தாமதமானால் வரி செலுத்துவோருக்கு அரசு வட்டி வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. இது வரி செலுத்துவோரின் உரிமையைப் பாதுகாக்கிறது.வட்டி விகிதம்: ரீஃபண்ட் தொகைக்கு மாதத்திற்கு 0.5% அல்லது மாதத்தின் பகுதிக்கும் அதே விகிதத்தில் வட்டி கணக்கிடப்படுகிறது.வட்டி தொடங்கும் நாள்: நீங்கள் ஐ.டி.ஆர் தாக்கல் செய்த மாதம் முடிந்த பின்னரோ அல்லது ரீஃபண்ட் தொகை நிர்ணயம் செய்யப்பட்ட மாதம் முடிந்த பின்னரோ, இதில் பிந்தைய தேதியில் இருந்து வட்டி கணக்கீடு தொடங்குகிறது.எதன் அடிப்படையில் வட்டி? டி.டி.எஸ் (TDS), அட்வான்ஸ் டேக்ஸ், சுய மதிப்பீட்டு வரி (Self-assessment tax) உட்பட உங்களுக்குத் திரும்பச் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகைக்கும் இந்த வட்டி கணக்கிடப்படும்.கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!தவறுகளுக்கு வட்டி இல்லை: நீங்கள் தாக்கல் செய்த ஐ.டி.ஆரில் பிழைகள் இருந்தாலோ, தவறான தகவல்களைக் கொடுத்திருந்தாலோ, அந்தத் தாமதத்திற்குக் காரணம் நீங்களாக இருந்தால், வட்டி வழங்கப்படாது.அரசுத் துறை தாமதம்: வருமான வரித் துறையின் நிர்வாக அல்லது தொழில்நுட்பக் குறைபாடுகளால் தாமதம் ஏற்பட்டால், வரி செலுத்துவோர் நிச்சயம் வட்டி பெற உரிமை உண்டு.ரீஃபண்ட் தாமதமானால் என்ன செய்வது?உங்கள் ரீஃபண்ட் தாமதமானால், வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் உங்கள் நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். மேலும், தாமதம் நீடித்தால் மத்திய செயலாக்க மையம் (CPC) அல்லது சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அதிகாரியை (Assessing Officer) அணுகிப் பின்தொடர வேண்டும்.சரியான ஆவணங்கள், வரி செலுத்தியதற்கான ஆதாரங்கள் மற்றும் துறைக்கு நீங்கள் அனுப்பிய கடிதங்களின் பிரதிகளைப் பாதுகாப்பது அவசியம்.முடிவு: வருமான வரித் துறை ரீஃபண்டைத் தாமதப்படுத்தினால், வரி செலுத்துவோருக்கு வட்டி மூலம் இழப்பீடு வழங்க சட்டம் வழிவகை செய்கிறது. சரியான நேரத்தில், துல்லியமாகக் கணக்குத் தாக்கல் செய்வது, ரீஃபண்டைப் பெறுவதற்கும், தாமதத்திற்கான வட்டியைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியம்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version