டி.வி

மீனாவுக்கு அடுத்தடுத்து குவிந்த பணத்தொகை.? பொறாமையில் ரோகிணி.! ஸ்ருதி விபரீத முடிவு

Published

on

மீனாவுக்கு அடுத்தடுத்து குவிந்த பணத்தொகை.? பொறாமையில் ரோகிணி.! ஸ்ருதி விபரீத முடிவு

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,   முத்து மீனாவுக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுப்பதாக பேசிக் கொண்டிருக்க, அண்ணாமலை தான்  30000 தருவதாக சொல்லுகின்றார்.   அதற்கு விஜயா திட்டுகின்றார் . ஆனாலும் நான் என்னுடைய காசை தான் கொடுக்கின்றேன் என்று சொல்லுகின்றார் அண்ணாமலை. அந்த நேரத்தில்  ரவி நானும் ஐயாயிரம் தருகின்றேன் என்று சொல்ல, ஸ்ருதியும் எனது பங்கிற்கு 5000 தருகிறேன் என்று சொல்லுகின்றார்.  இது விஜயாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின்பு மனோஜிடம் எதற்காக பணம் தந்த விஷயத்தை உன் அம்மாவிடம் சொன்ன?  அவர் என்னை திட்டுவார் என்று தெரியாதா உனக்கு?  அந்த பணத்தை திரும்பத் தர மாட்டேன் என்று ரோகிணி சொல்லுகின்றார்.  இதனால் மீதமுள்ள 10,000 ரூபாவை   வித்யாவுக்கு கொடுப்பதற்கு வைத்துள்ளார். மேலும் இந்த வீட்டில் மீனாவுக்கு ஒன்று என்றால் எல்லோரும் சப்போர்ட் பண்ணுறாங்க.. ஆனா எனக்கு யாரும் சப்போர்ட் பண்ணுறாங்க இல்ல.. நீயும் சப்போர்ட் பண்ணுற இல்ல என்று ரோகிணி சொல்லுகின்றார். ஸ்ருதி தனது ரெஸ்டாரண்டுக்கு  புதிய செப் ஒருவரை   நியமிப்பதற்காக அவர் சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை குடும்பத்தினருக்கு கொடுக்கின்றார்.   அது ரவி சமைத்தது போலவே இருக்குது என்று சொல்ல, அதை சமைத்தது ரவியின் அசிஸ்டன்ட் தான் என்று ஸ்ருதி சொல்லுகின்றார். இதனால் அவரை வேலைக்கு அப்பாயின்மென்ட் பண்ணுவதற்கு  முடிவு எடுக்கின்றார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா, அப்பா ரவி வேலை செய்யும் ரெஸ்டாரண்டுக்கு சென்று, ஸ்ருதியுடன் சேர்ந்து ரெஸ்டாரண்டை நடத்துமாறு   சொல்லுகின்றார்கள். ஆனால் ரவி   நான் எனது சொந்த உழைப்பில் ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க இருந்தேன். ஸ்ருதி அவசரப்பட்டு  ஆரம்பிச்சுட்டா.. என்னால இப்போ போக முடியாது என்று சொல்லுகிறார். அந்த நேரத்தில் நீத்து ரவியை கூப்பிட்டு,  நாங்க அப்ளை பண்ணின  கம்பெனி ஒன்று எங்களை செலக்ட் பண்ணி விட்டது என்று சொல்லி சிரித்துப் பேச, இதனை அவர்கள் அவதானிக்கின்றனர்.  அதன் பின்பு  ஸ்ருதியின் அப்பா நீத்துவை ரவியிடம் இருந்து பிரிப்பதற்கு திட்டம் போடுகிறார். இறுதியில் முத்து  தனது நண்பர் ஒருவரை சந்திக்கின்றார். அங்கு அவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டி ஓடி வருகின்றார். இதை பார்த்து மீனாவுக்கு புது ஸ்கூட்டி வாங்க திட்டமிடுகிறார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version