தொழில்நுட்பம்
வாய்மொழிக் கட்டளை போதும்… மவுஸ், கீபோர்டு இல்லாமலே கணினியை இயக்கும் கூகுள் ஜெமினி 2.5!
வாய்மொழிக் கட்டளை போதும்… மவுஸ், கீபோர்டு இல்லாமலே கணினியை இயக்கும் கூகுள் ஜெமினி 2.5!
உலகை ஆளும் நோக்கில், கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் அடுத்தப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெமினி 2.5 கணினிப் பயன்பாடு (Gemini 2.5 Computer Use) என்ற புதிய ஏ.ஐ. மாடலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இது வெறும் ஃப்ராம்ப்ட் மட்டும் நிறைவேற்றுவதில்லை; ஒரு மனிதரைப் போல இணையத்தில் உலாவரவும், கணினியின் யூசர் இண்டர்பேஸ் தொடர்புகொள்ளவும் திறன் கொண்டதுதான்.ஜெமினி ப்ரோவின் அபார சக்திஜெமினி 2.5 ப்ரோவின் ஆற்றலுடன் இயங்கும் இம்மாடல், தற்போது சந்தையிலுள்ள போட்டி மாடல்களை விஞ்சி நிற்பதாக கூகுள் பெருமையுடன் கூறுகிறது. மேலும், இது மற்ற ஏ.ஐ. மாடல்களை விடக் குறைவான தாமதத்துடனேயே (Low Latency) வேலைகளை முடிப்பதால், மிக வேகமாகக் கட்டளைகளை நிறைவேற்றும். சாதாரண மனிதர்கள் கணினியில் என்னென்ன செய்வார்களோ, அத்தனை பணிகளையும் இந்த ஏ.ஐ. செய்து முடிக்க முடியும். உதாரணமாக, பயனரின் ஃப்ராம்ப்ட் புரிந்துகொண்டு, இணையத்தில் ஒரு படிவத்தை நிரப்புவது முதல் சமர்ப்பிப்பது வரை அனைத்தையும் இதுவே செய்யும்.மனிதனின் விரல் அசைவுகள் AI-க்கு கைவந்த கலை!இந்த புதிய ஏ.ஐ. மாடல் செய்யும் காரியங்களை வியக்க வைக்கின்றன. மவுஸைக் கொண்டு கிளிக் செய்தல், கீபோர்டு பயன்படுத்தி டைப்பிங் செய்தல், ஸ்கிரீனை ஸ்க்ரோல் செய்தல், கீபோர்டு குறுக்குவழி (Keyboard Combinations) பட்டன்களைப் பயன்படுத்துதல், கர்சரை ஒரு இடத்தில் நகர்த்துதல். மெனுக்களைத் திறந்து தேர்வுகளை மேற்கொள்வது. கூகிள் நிறுவனம் வெளியிட்ட செயல்விளக்க வீடியோவில், ஒரு கலைந்து கிடக்கும் மெய்நிகர் பலகையில் (Virtual Board) உள்ள குறிப்புகளை, வாய்மொழி கட்டளையின்படி ஏ.ஐ. மாடல் தானாகவே இழுத்துச் சென்று சரியான பிரிவில் வைப்பது காட்டப்பட்டுள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்த ஏ.ஐ. மாடல் பல சோதனைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், இது தற்போது 13 செயல்பாடுகளை மட்டுமே ஆதரிக்கிறது. மேலும், இது இணைய ப்ரௌசரை (Browser) மட்டுமே அணுகும் திறன் கொண்டது; டெஸ்க்டாப் அல்லது மொபைலின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS) நிலைக் கட்டுப்பாட்டிற்கு இன்னும் முழுமையாக மேம்படுத்தப்படவில்லை என்றும் கூகிள் தெளிவுபடுத்தியுள்ளது.இருப்பினும், கூகிள் குழுக்கள் இதை மென்பொருள் பரிசோதனைக்கு (UI Testing) பயன்படுத்தி வருகின்றனர். இதன் மேம்படுத்தப்பட்ட வடிவங்கள், கூகிளின் ஏ.ஐ. மோட் இன் சர்ச், Firebase Testing Agent மற்றும் நீங்க இயல்பான மொழியில் பேசும் கட்டளைகளை ஆய்வு செய்தல், திட்டமிடுதல் போன்ற கடினமான பணிகளைச் செய்யக்கூடிய Project Mariner போன்ற திட்டங்களுக்கு ஏற்கனவே உயிரூட்டி வருகின்றன. மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப இணையத்தில் இயங்கும் இந்த AI மாடலின் வருகை, வருங்கால வேலைகளில் AI முகவர்களின் (AI Agents) ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.