சினிமா
Press-அ சந்திக்க விஜய்க்கு பயமா.? நடிகர் சஞ்சீவ் சொன்ன உண்மை.! படுவைரல்.!
Press-அ சந்திக்க விஜய்க்கு பயமா.? நடிகர் சஞ்சீவ் சொன்ன உண்மை.! படுவைரல்.!
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் தனக்கென ஒரு வலிமையான அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கும் நாயகன் தளபதி விஜய். அவரின் செயல்கள், அறிக்கைகள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஊடகங்களிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்தியிருந்தது.அண்மையில் நடந்த கரூர் சோகமான நிகழ்வுக்கு பின்னர், தளபதி விஜய் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வருவதை பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, அவரது நெருக்கமான நண்பர் மற்றும் நம்பத்தகுந்த நபராகக் கருதப்படும் நடிகர் சஞ்சீவ், முக்கியமான விளக்கத்தை வழங்கியுள்ளார்.ஒரு பத்திரிகையாளர் நேர்காணலில், “விஜய் ஏன் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளிக்கச் சென்ற சஞ்சீவ், நேர்த்தியான வார்த்தைகளில் விஜயின் நிலைப்பாட்டையும், உணர்வுகளையும் பகிர்ந்திருந்தார்.”பிரஸ்ஸ சந்திக்க விஜய்க்கு என்ன பயம். அதுக்கான நேரம் வரும் போது அதை பண்ணுவார். அதே மாதிரி அங்க நடந்தது மிகப்பெரிய இழப்பு தான். அதை தான் விசாரிச்சிட்டு இருக்காங்கள். உண்மை வெளியே வரும்னு நம்புறேன்.” என்றார் சஞ்சீவ். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.